Tuesday, March 26, 2019

#பாண்டிச்சேரி - WRITTER கி ரா- MAY2017

கி ரா
 பிரம்மிப்பாய் இருந்தது அவரை பார்க்கவும் தெளிந்த அவரின் அனுபவ பேச்சைக்  கேட்டுக்கொண்டிருந்ததும். 
தன்னை ஈர்த்த கம்யூனிசம் பேசும் அயல்மொழிப் புத்தகங்களை தலைப்புகளோடு நினைவில் வைத்தும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வாசித்த புத்தகங்களில் பிடித்தமானவைகள்  குறித்தெல்லாம் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். என்னவொரு ஞாபக சக்தி.

ஆழ்ந்த வாசிப்பையெல்லாம் விட்டு வருடங்களாகிறது. இப்பவெல்லாம் தினசரிகளில் தொடங்கி அதன்மட்டிலேயே முடிவதாயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் செய்திதாளை படித்துபின் மடித்துவைத்ததும் என்னதான் படித்தோமென மொத்தமாய் மறந்துபோகிறது. முழு நேரவிரய கணக்குதான்.
 இந்த தொண்ணுற்றி ஐந்து   வயதிற்குமேல் மெனக்கெட்டு நாட்டு நடப்புகளை தெரிந்துகொண்டு என்னாகப்போகிறதென  தினமும் நினைத்தாலும் மறுநாள் செய்திதாள்களை தொடாமல் இருக்கமுடிவதில்லை. படிப்பதை விட இந்த வயதில் இசையில் மூழ்கிவிடுவதே நன்றாயிருக்கிறது என்றவர் தனக்கு பிடித்தமான  பேரீச்சை பழங்களை எடுத்து தந்து சாப்பிடச்சொன்னார்.  குளிர்ந்த எழுமிச்சை சாறும் மோரும் தந்து உபசரித்தார் கி ராவின் மருமகள். அவரின் வீட்டில் அமர்ந்திருந்த அந்த  அரைமணி நேரமும் போனதே தெரியவில்லை. இரண்டு தலைமுறைக்கு மூத்த எழுத்தாளர்.. இந்த சிறியவர்களோடு இத்தனை நேரம் என்ன பேச்சு என்கிற நினைப்பே இல்லாமல் அவ்வளவு இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்ல மனிதரை சந்திந்துவிட முடிந்ததில் நண்பிகள் எங்களுக்கு மிகுந்த  மகிழ்ச்சி.
#பாண்டிச்சேரி
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...