Thursday, March 21, 2019

வணங்கி தியானிப்பது தவிர பெரிதாய் பக்தி எல்லாம் கிடையாது. ஆனாலும் கோவிலுக்கு போவதில் அலாதி ப்ரியம் .. ஒரு இதமான மனநிலை கிட்டும்.

போனமுறை இந்திய பயணத்தில் நிறைய கேள்விபட்டு ரொம்பவும் ஆர்வத்தோடு ப்ளான் பண்ணி போனது கோவையில் தியானலிங்கத் திருக்கோவில்..

வழியெல்லாம் பச்சை துளிர்த்த வனப்பெருக்கு, சூழ்நிலையும், காலநிலையும் பதமே .. வாயிலின்
உள்ளே நுழைகையிலேயே காலனி, கைபேசி, கேமரா உள்ளிட்டவை ஓப்படைக்கபடனும்.. அடுத்து ஒரு கிலோமீட்டர் வெட்ட வெளியில் நடை.. உள்ளே இருப்பது யாது, எப்படி நடந்துக்கனும்ன்னு சொல்ல ஒரு வீடியோ படம் காட்டபடும். கட்டாயம் பார்க்கனும். பிறகு கைப்பை, சத்தம் எழுப்பகூடியதாய் இருந்தால் வளைவி, கொலுசு எல்லாம் ஒப்படைத்தே ஆகவேண்டுமாய் அடுத்த கவுண்டர். மேலும் இருகட்ட பரிசோதனைகள் தாண்டி தியான மண்டபத்தில் நுழைவதற்குள் உண்மையில் போதும் போதுமாயிடும். சேவையில் சுற்றிகொண்டிருப்பவர்கள் சொல்வதுதான் வேதம்.. நம்ம விருப்பத்துக்கு தியானித்து எழுந்து வர அனுமதியில்லை. குழந்தைகள் எவரும் அழவோ, சிரிக்கவோ .. தும்மலுக்கும் அனுமதி இல்லை. போல சொல்ல நிறையவே இருக்கிறது.. கோவில் என்றால் கட்டுபாடுகள் இருக்கும் தான். ஆனாலும் வெளியே வரும்போது பரவலாய் நிறைந்திருக்கும் நிம்மதி அது கிடைக்காமல் போனது முகக்குறை.. இந்த பாட்டு ஷூட் பண்ண அனுமதிக்க பட்டிருக்கு.. எத்தனை சத்தம்
எத்தனை கேமிராக்கள் ..
நெறிமுறை கட்டுக்கோப்பு என்றால் எல்லோருக்கும்
எப்போதும் தானே!!



No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...