Thursday, March 21, 2019

JAN - 2016 - 4 Babies A Second

National Geographic
சேனலில் 4 Babies A Second எனும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகிறது.
வெவ்வேறு கண்டங்களின் நான்கு வெவ்வேறு நாடுகளில் நடக்கும்   குழந்தை பிறப்பு. பிரசவ அறையிலிருந்தே நேரடியாக காட்டப்படுகிறது.
தாயிலிருந்து குழந்தையை வெளியே எடுக்கிற அந்த அழகான நிமிடங்களை தத் ரூபமாக காட்சிப்படுத்திக் காட்டுகிறார்கள்.
இந்தியாவில் பாண்டிச்சேரியில் ஒரு பெண்ணுடைய பிரசவம் காட்டப்பட்டது. காலங்காலமாக நடக்கிற அதே நடப்பில் மனைவியை பிரசவ அறைக்குள் அனுப்பிவிட்டு பதட்டத்தோடு கதவுகளுக்கு வெளியே காத்திருக்கும் கணவன்.
பிரசவித்த பின் துவாலையில் பொதித்து பச்சை பிள்ளையை முகம் பார்க்க தந்தையாகியவனிடம் கொண்டு காட்டும் நர்ஸ்.

அடுத்து பாரிஸில் ஒரு பிரசவம். முழு பிரசவ நேரமும் கணவன் மனைவிக்கு அருகிலேயே அனுமதிக்கப் படுகிறான். அந்நேரத்தின் வலி துடிப்பை எல்லாம் நேரில் கண்ட நிலை, பிள்ளை வெளியே வந்த அந்த நொடியில் கண்ட பரவசம், சந்தோசம் கூடவே வெளியே எடுத்த பிள்ளையை, தாயாகியவளின் வயிற்றின் மேல் கிடத்தி நஞ்சுக்கொடியை ( அதுதானே பெயர்) தந்தையாகியவனின் கைகளால் கத்திரிக்கச் செய்தது எல்லாமுமாக ஒரு கலவையான உணர்ச்சி பொங்க சிலநிமிடங்கள் அப்படியே அவ்விடத்திலேயே தரையில் கிடந்து  தன்னை அசுவாசப்படுத்திக்கொள்கிறான்.
பின் ஆதரவாக மனைவியின் கையை பற்றிக்கொள்கிறான். மிக அணுக்கமான அழகானதொரு காட்சி.
வெறுமனே இச்சைக்காக நெருங்கின நெருக்கமாக மட்டுமே இல்லாது இப்படி  பிரசவிக்கும் போதும் உடனே இருப்பது
 அவசியமானதும் உளவியல் ரீதியாக சரியான முறையும் தானே.
இருந்தும் நம்மூரில் ஏன் இன்னமும் கட்டுப்பெட்டிதனமாக ஒரு பெண்ணின் பிரசவம் ஏதோ அவளுக்கு மட்டுமே உரிய ரசசியம் போல கணவனுக்கு கதவடைத்து செய்யப்படுக்கிறதோ புரியவில்லை. 

Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...