Tuesday, March 26, 2019

#பிரகாசமாஎரியுதுபல்ப்பு- OCT 2017

#பிரகாசமாஎரியுதுபல்ப்பு

சின்னது சரியான வாய்பேசி. தன்பக்கம் தான் சரி என்பதில் வாய்பேசியே நின்று அசராமல் சாதிப்பாள்.
ஸ்கூல் விட்டு வந்தும் வராமல் பையை கூட கழட்டாமல் அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது. எதுவெல்லாம் நினைத்திருந்தாளென படபடன்னு ஒரு பத்து நிமிசத்துக்காவது சொல்லிமுடிச்சப்புறம் தான்  மத்த வேலை பார்க்கும். பெரியவ அப்படியில்லை. நாமா கேட்டாதான் எதோ சொற்ப பதில் வரும்.

அக்காக்காரிக்கு தெரிகிற எல்லாம்  தானும் மெனக்கெட்டாவது தெரிஞ்சுவச்சுக்கங்கிறதில முனைப்போடு இருக்கும் சின்னது. இன்னமும் கூடுதலாக நடப்பு அரசியல் ஆன்மிகமெல்லாம் கூட பேசுவாள்.
எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும்ன்னு கேட்டா schoolல் free period இருந்தப்போ paper read பண்ணி தெரிஞ்சுக்கிடேங்கும்.

"அப்பா எனக்கெல்லாம் blind arranged marriage பண்ணிவைக்கலாம்ன்னு நினைக்காதே. நானே select பண்ணி love பண்ணி தான் கல்யாணம் பண்ணிப்பேன்னுச்சு ஒருநாள். கன்ச்சுக்கு கண்ணில் பூச்சி பறக்காத குறைதான். " loveனா என்னடி" !?
Love ஒரு feelப்பா explain பண்ணல்லாம் முடியாதுங்குது. சரிதான் டி மகளே😮

ஒரு விடுமுறை நாளின் பிந்தைய இரவில் படுக்கபோனபோது வழக்கம்போல இரண்டும் கதைசொல்லச்சொல்லி கேட்டுதுங்க. பின்ன குறுக்கும் நெடுக்குமா அக்காவும் தங்கையும் மாத்தி மாத்தி கேள்வியா கேட்டு தள்ளிச்சுங்க. கன்ச்சுவ கல்யாணம் செய்றதுக்கு முந்தி நான் யாரையாவதும் love பண்ணிருக்கேனான்னு ஒரு கேள்வி. நானும் கொசுவர்த்தி சுத்தி சிவாவை பார்த்ததையும் பேசினதையும் சொல்லி அவன பிடிச்சமாதிரி வேற யாரையும் பிடிக்கல.  ஆனா நான் டென்த் க்ரேட் படிக்கும் போதே அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஸோ அதுக்கு அப்புறம் லவ் எல்லாம் இல்லைன்னு சொன்னேனா
உடனே சின்னது " ஐய்யே இது love இல்லமா crush. Loveக்கும் crushக்கும் difference இருக்கும்மான்னு பாடம் எடுக்குது.
அடியே முளைச்சு இன்னும் முழுசா மூனு இலை விடல!!! ☺☺

துபாயிலிருந்து இங்கு வந்தப்ப ஸ்கூல் அட்மிசனுக்கு பிரின்ஸ்பாலோட ஒரு மீட்டிங் இருந்தது. பதிலுக்கு பதில் வார்த்தையாடி அந்த அம்மாவேயே அதிர வைத்து அவர் வாயாலயே இவளுக்கு ஏன் 4thக்கு அட்மிசன் கேக்கிறீங்க தாரளமா ஐந்திலேயே சேர்க்கலாம்ன்னு  தூக்கிபோட்டுவிட்டார். அப்படி மூனிலிருந்து ஐந்துக்கு தாவியும்  இன்னமும் எப்பமுடியும் எனக்கு படிப்புன்னு விரல்விட்டு எண்ணிக்கிட்டு இருக்காங்க  மேடம்.

நாள் பூராம்  விளையாடச்சொன்னாலும் அலுக்காது ஆனா படிக்க உட்காரவைத்தால் போதும் புக்கும் கையுமா சும்மா சுகமா தூக்கம் வந்திடும்.
வணங்கி படிக்கிறதில் இஷ்டமில்லை exam paperல இஷ்டத்துக்கு கதைவிட்டு வைத்திருப்பாள். மார்க்கும் குறைவாதான் வாங்கிட்டு வருவா என்றாலும் அதை பத்தி எல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை.

 இப்படி வணங்கி படிக்காத மற்றும் விழுந்து விழுந்து படிக்கிறன்னு வெவ்வேறு விதமான பிள்ளைகள் ஒரே வகுப்பில் இருப்பாங்கதானே. அந்தந்த பிள்ளைகளுக்கு தகுந்தாற்போல அவரவரே வினாத்தாள்களை தெரிவு செய்துகொள்ளும்படி lite, medium, hard எனும் மூன்று வித வகைப்பாட்டில் வினாத்தாள்கள் தயாரிச்சு வச்சிருப்பாங்க பரீட்சைக்கு பள்ளியில்.
இந்த சின்னது படிக்குதோ இல்லையோ ஆனா திணக்கமா எப்போதும் hard paperஐ தான் தேர்ந்தெடுத்து வைக்கும்.

சனிக்கிழமை தான் கடைசித்தாள் முடிஞ்சது. வீட்டிற்கு வந்ததும் பையை போட்டுவிட்டு கதையை அவிழ்க்கத்தொடங்கிவிட்டாள்.
வினாத்தாளை பார்த்ததும் செம கோபம் வந்துச்சாம். எல்லா விடைகளும் எழுதிமுடிச்சப்புறம் கடைசி பக்கத்தில் " இந்த question paper prepare செய்தவங்க யாரா இருந்தாலும் உடனே என்னை வந்து meet பண்ணுங்க. இந்த time to  இந்த time  இந்த class இந்த sectionல் இருப்பேன் பெயர் சம்ரிதான்னு எழுதி கோவமா இருக்காப்ல ஒரு பொம்மையும் வரைஞ்சு தாளை கொடுத்திட்டுவந்திருக்கா.
ஏன் அப்படி செஞ்சேன்னு கேட்டா
" ஆமாம்மா கோவமா வந்துச்சு. Hard paper எப்படி prepare பண்ணி வச்சிருக்காங்கன்னா lite விட liteஆ இருந்துச்சு. என் favorite question ஒன்னு கூட வரலைன்னு அளக்கறா ☺

நந்திதா ட்ராயிங் போறான்னு தானும் போறேன்னு அடமா சேர்ந்து ஒரே மாசத்தில் போர் அடிக்குது சும்மா வரையவே சொல்றாங்கன்னு நிறுத்தியாச்சு. இப்போ நந்திதா கவிதை எழுதிற மாதிரி நானும் எழுதறேன்னு தொடங்கியாச்சு. அதான் இது.

Darkness of the corner
by Samrita Ganeshan

The night the evening haunted by ghosts
who say the wish of them all
the more they dream the more we leave
the more they wish the more we see
the shadows go a upon
the lands of doom the lands of whom we shall seek upon
so remember this and you will be blessed until
the night the evening haunted by ghosts
who say the wish of them all
the more they dream the more we leave
the more they wish the more we see
the shadows go a upon
the lands of doom the lands of whom we shall seek upon
so don't make me repeat or you shall face them all.
Photo

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...