Thursday, March 21, 2019

#குற்றாலம் - DEC 2015

ரஞ்சித் குடும்பத்தில் கிறிஸ்துமஸ் தொடங்கி புதுவருடம் தொடங்கும் வரை ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு சுற்றுலா தளத்தில் குடும்பத்தின் மூன்று தலைமுறை உறவுக்கூட்டமும் கூடிக்கொண்டாடுவது வழமை. இம்முறை மீ அண்ட் குட்டீஸ் அவர்களோடு சேர்ந்து கொண்டோம்.
ஆக பெரியவர்கள் இருபத்தியெட்டும் குஞ்சுகுளுவான்கள் பதினாறுமாக கோவில்பட்டியில் இருந்து நேற்று அதிகாலையில் குற்றாலத்தை நோக்கி கிளம்பினோம்  அப்பொழுதுதான்  வெளிச்சம் விரியத்தொடங்கிய நேரத்தில் இயற்கை கொட்டிகிடக்கிறது வழியெல்லாம் அவ்வளவு அழகாக. இடையே கழுகுமலையில் நிறுத்திக் குளிரக் குளிர நீரில் கால்கள் பொதிய நின்று சூடான தேநீரோடு ஒரு சுவையான அனுபவத்தை ருசித்தபின்
இரண்டு மணி நேரப்பயணம் போனதே தெரியவில்லை. குற்றாலத்தில் பன்னிரண்டு படுக்கையறைகளோடான இந்த முழுவீட்டையும் இரு தினங்களுக்கு வாடகைக்கு எடுத்து கூடவே இருந்து சமைத்துதர விருதுநகரில் இருந்து சமையல் ஆட்களும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
வீட்டின் அமைப்பு அச்சு அசல் அப்படியே சந்தரமுகி வீடுதான். உள்ளே நுழைந்தது தான் தாமதம் . மேலே மரப்படியில் ஏறி ஒவ்வொரு சின்ன ஜன்னலிலும் நின்று ..முழுசாய் மாறி நிற்கும் சந்திரமுகிய பார், என்ன கொடுமை சரவணா.. மாப்பு வச்சிட்டியே ஆப்பு
 லகலகவென கூச்சலோடு  குட்டிவாண்டுகள் ஒரே ஆர்பாட்டம்.
செம ஜாலியா போச்சு நேற்று முழுக்க. காலையில் புலியருவியில், மதியம் பிரதான அருவியில், இரவு உணவுக்குப்பின் மூத்தவர்களும் பொடிசுகளும் உறங்கியபிறகு ஆண்களும் பெண்களுமாய் நாங்கள் பத்துபேர் மட்டும் ஐந்தருவி பக்கம் போனோம். சான்ஸே இல்லை. . சில்லிப்போடு  ஜோவென கொட்டி உடல்போர்த்திய
 நீரோடு நடுநிசி வரை நனைந்து நனைந்து குளிர்விட்டுப்போச்சு.
மறக்கவே முடியாத சுகமான புது அனுபவத்தை அள்ளித்தந்தது நேற்றின் பொழுது.

#குற்றாலம்
Photo


No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...