Thursday, March 21, 2019

ஆழ்கடல் குறும்படம்

ஆழ்கடல் குறும்படம்

அந்த ஆணும் பெண்ணும். பெண் கற்பனை உலகத்தில் தெளிவாக மிதக்கிறாள். அது அவளின் நிஜ உலகத்தில் இல்லாத ஒன்றை இட்டு நிரப்புவதாக உள்ளது. கண்கள் மினுக்க அந்த கற்பனையில் தொலைந்து தானும் தனதுமாகிய நினைப்பிற்கு காட்சி வடிவங்கள் தந்து படமாக்க நினைக்கிறாள்.

ஆண் அந்த  கற்பனை உலகிற்குள்ளும் பொருந்தி போகாமல் நிஜ உலகின் எதார்த்தையும் எதிர்கொள்ள முடியாதவனாகி தடுமாற்றத்திலிருக்கிறான். இது தான் நான், எனக்கானது இது என்பதை நேர்மையாக நேருக்கு நேராக வெளிப்படுத்துவதில் மிகுந்த தயக்கவாதியாயிருக்கிறான். அவனுடைய எழுத்தைக் கடந்து அவனின் சொந்த உணர்வுகளுக்கு உயிர் இருக்கிறது ஆனால் உருவம் தர இயலாதது என நினைப்பவனாக இருக்கிறான்.
 
இப்படியாக கனவுக்கும் எதார்த்தற்கும் இடையில் நடக்கும் போர் பாஷை கடைசி காட்சியில் அந்த பெண்ணுக்கு வரும் தொலைபேசி அழைப்போடு முற்றுப்பெருகிறது. அந்த நிமிடம் வரை கற்பனை உலகில் மிதந்தவள் அத்தோடு அதை விடுத்து இயல்பாய் நடப்புக்கு திரும்பிவிட்டாள்.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...