Monday, January 14, 2013

கற்பனைக்கு இனியது



நடுநிசி நிலவொளியில், கடற்கரை மணலில் காலாற நடப்பது... (என்னா தைரியம்!)

ஆர்பரிக்கும் அலையில், கொஞ்சமாய் கால் நனைப்பது ...(சுனாமி வர போகுது..பாத்து)

கொட்டுகிற மழையில், வேகமாய் மிதி வண்டிசெலுத்துவது...(சளி பிடிக்கும்)

உயரமான கட்டிடத்தில், உச்சியில் ஏறி பார்ப்பது..(இப்பவே கண்னை கட்டுதே...)

... கலர், கலர் பலூன்களை, ஊதி.. ஊதி உடைப்பது ..(தோடா!)

ஊசியாய் துளைக்கும் ஊதல் காற்றில்..மூக்கு நுனி சில்லிட்டு இருப்பது...(ஜன்னி..தான் கன்பார்ம்)

நட்பு வட்டத்தோடு, நாள் முழுக்க....இலக்கில்லாமல் சுத்துவது....(அது ஒரு கனா காலம் )

படிக்காமல் எழுதிய தேர்வில்... முழு மதிப்பெண் வாங்குவது..(காப்பி, டீ அடிகலையே )

பேருந்து ஜன்னல் பக்க இருக்கையில் நீண்ட தூரம் பயனித்தல்..(புட்போர்ட் தான் கிடைக்கும்)

அற்றோர, மரத்தடி ஊஞ்சலில், அசுர வேகத்தில்
ஆடுவது..(ஆறும் இல்லை, மரமும் இல்லை.. ஊஞ்சல் எங்கே??)

அதிகாலை நேரத்து அழ்ந்த தூக்கம்...(வரும் ஆன... வராது...)

அதிர அதிர இசை கேட்பது...(தோ, வராங்க பக்கத்துக்கு வீட்டிலேருந்து...)

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...