Tuesday, March 26, 2019

DEC2017

விசேஷ நாட்களில் கோவில்களுக்கு போய் கூட்டத்தில் சிக்கிக்கொள்வது ஒரு போதும் பிடித்தமில்லை. போலவே பண்டிகை நாட்களுக்கான பரபரப்பான ஷாப்பிங்.
இந்த வருச தீபாவளிக்கு பெரிசா சுரத்தில்லை. புதுசா ட்ரெண்டி கலெக்ஷஸும் காணோம். விதம்விதமாய் ஆனால் அதேவகை துணிமணிகள் பார்க்கவும் ரசனைக்குரியதா இல்லை.

பார்த்ததும் நச்சுன்னு மனதிற்கு பிடிக்கிற உடுப்புகளை தான் எப்போதும்  வாங்குவேன்.
நேர்த்தியாக உடுத்திக்கொள்ள கொஞ்சம் அதிகம் மெனக்கெடுபவள். புறதோற்றத்துக்கு மட்டுமாக அல்ல. அது ஒரு மாதிரி அக ஊக்கி. ஒரு கடையில்  kurti, அடுத்ததில் palazzo, மற்றொன்றில் pashmina silk duppatta என வாங்கி புதுசா ஒரு செட் சேர்த்தாச்.
இப்பவும் கலம்காரி க்ரேஸ் குறையாம கடைகளில் குவிந்திருக்கு.
ஆறுமாதத்திற்கு முன்பே ஆன்லைனில் வாங்கிய கிளிப்பச்சை செட்டிநாடு காட்டன் சேலையும், சோடி போட தைத்துவைத்த கலம்காரி ரவிக்கையும் உடுத்திக்கலாம் தீபாவளிக்கு.
 
எல்லா கடைகளில் பெண்கள் பகுதியில் நிற்க இடமில்லாமல் நெட்டித்தள்ளிகிற கூட்டம். அப்படியே தலைகீழாக ஆண்கள் பகுதி. ப்ப்ப்ப்பா பாவம் ஆண்கள். இருக்கிற பத்து பிராண்டிலும் அதே முப்பது வகை சட்டை துணி. நூறு ஆண்களின் எழுபது பேராவது ஒன்றுபோல ஒரே மாதிரி உடுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம். பரிதாபம். எப்படிதான் போர் அடிக்காம இருக்கோ. அந்த பகுதியில் கொஞ்ச நேரம் நிற்கவே செமத்தியா போர் அடித்தது.

அடுத்து இனிப்பு பலகாரங்கள்ன்னு யோசிச்சா.. ஏன் தித்திப்புன்னு எழுதி வச்சு படிச்சாலே திகட்டுதேங்கிற அளவுக்கு மனதிற்கு பயிற்சிகொடுத்தாயிற்று. எடை குறைப்பு நடவடிக்கை பாஸ்.
ஆகையால் நோ பலகாரம்ஸ். தேவைக்கேற்ப கடையில் வாங்கிக்கலாம் மத்தவங்களுக்கு. முடிஞ்சுதா

பட்டாசுமட்டும் எல்லா வருடங்களையும் போல மத்தாப்பும், பூவானமும் சங்குச்சக்கரமும் தான் விருப்பம் எனக்கும் குட்டீஸுக்கும். கூடுதலா துப்பாக்கியில் போட்டு படபடன்னு சுடும் பொட்டுப்பட்டாசு என்னோட பேவரைட்.
பத்து நாட்கள் விடுமுறை தொடங்கியாச்சு. தினம் அதிகாலை கடற்கரைக்கு போலம்ன்னு நினைப்பு வச்சிருக்கேன். ஊபர்காரன் ஒரு மாசத்துக்கு ஆஃபர் அள்ளிவழங்கியிருக்கான். ஊர் சுத்தலாம். நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் ஒரு ரவ்ண்ட் போய்ட்டு வரலாம்.
1000 GB கைவசம் இருக்கு. சொக்கா எத்தனை படங்கள் டவ்ன்லோட் செய்யலாம். இப்படி நிறைய லாம்கள்.
சரி ஆகட்டும்.
கூடவே வீட்டில்
தொடங்கலாம் சுத்தப்படுத்த. தேவையில்லாதவைகள எல்லாம் அப்படியே எடுத்து கழித்துவிடலாம். நிறைய இடமாவது கிடைக்கும்ன்னு  சொல்லிருக்கேன் கன்ச்சுக்கிட்ட.
ஸ்டார்ட் மூஜிக்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...