இருளோடு இறுகப் பிணைந்த
கரும்புள்ளிகளைக் குறித்தே
புனைந்ததில்
மேலும் குழையாதிருக்கட்டும்
அரிச்சுவடேறிய
சதுப்பு நிலச்சொற்கள்
மிகைத்ததன் ஒளி
கண்களில் தூர்ந்ததன்
குறும்பொறையானதும்
அணையாததாகவே காண்கிறது
எவரும் ஏற்றத்துணியாத
தீபத் திரிமுனைகள்
தீயிற் பாகமாக்குதலில்
பதம் பிசகிய போதும்
அதனோடு இதுவுமாக
கடந்து போதலின் காட்சி மாற்றம்
-புவனம்
பெண்ணைப்பற்றி தான் இருக்கும்னு நினைக்கிறேன் நீ எழுதிய கவிதை வரிகள் புவன்..
ReplyDeleteபெண் என்றால் ஒரு சிலருக்கு போகப்பொருளாகவும் ஒரு சிலருக்கு அடிமையாகவும் ஒரு சிலருக்கு இளக்காரமாகவும் இருக்கும் காலத்தில் பெண்ணைப்போற்றி தாயாய் சகோதரியாய் நினைத்து போற்றுவோரும் உண்டு இக்காலத்தில்.. ஆனா உன் கவிதை சொல்ல வந்தது கண்டிப்பா அதைப்பற்றி இல்லை..
பெண்ணுக்கு சம உரிமை கொடுத்தோம் என்று வாய்க்கிழிய தொண்டை வலிக்க கதறும் ஆணாதிக்கத்திற்கு சரியான அடி உன் கவிதை வரிகள் நச் புவன்..
ஒரு பெண்ணுன்னா அதிகம் சிரிக்கக்கூடாது. ஆண்களிடம் கதைக்கக்கூடாது. ஆணுடன் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது.. உறவல்லாது யாராவது ஒரு ஆணுடன் துணையாக ரோட்டில் நடந்துச்செல்லக்கூடாது.. இப்படி இதில் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் என்னவோ பெண் தன் கற்பையே இழந்துவிட்டது போன்று அவதூறுகளை அள்ளித்தெளிக்கும்..
ஒரு பெண் எதார்த்தமாய் இருந்தால் அதற்கு அவர்களே ஒரு பட்டம் கட்டிவிடுவார்கள்.. எப்டி சிரிக்கிறா பாரு.. அன்பா பேசி கவுக்குராளுங்க (இந்த வார்த்தை அப்படியே நான் ஒருவர் ஸ்டேட்டஸில் பார்த்தேன்) அலையிறாங்க… நட்புக்கொண்டாலோ நம்மிடம் மட்டும் தான் நட்புடன் இருக்கவேண்டும் வேறு யாரிடம் பழகவே கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பார்கள்.. கணவராக இருந்தாலோ தன்னை கேட்காமல் எந்த முடிவும் எடுக்க விடமாட்டார்கள்.. ஆகமொத்தம் பெண்ணை இன்னும் கை முஷ்டியில் தான் வைத்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது…
பெண் என்பவள் மனதில் வலிமையாக உடலில் வலிமைக்குன்றியதாக இருந்தாலும் தன் வாக்கிலும் தன் செயலிலும் கம்பீரத்தை நாட்டுகிறாள்.. சரி என்றால் உடன்படுவதும் தவறு என்றால் விலக்குவதும் தைரியமாக செய்கிறாள்..
ஒரு ஆண் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படுகிறது.. அதே ஒரு பெண் தவறு செய்யும்போது அதை பெரிதாக்கி இன்னும் கட்டுக்கதைகள் சேர்த்து அந்தப்பெண்ணின் குணத்தையே தவறாக சொல்கிறார்கள்…
இருட்டில் வைக்கும் புள்ளிகள் கண்ணுக்கு தெரியாதபோது அது இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று வார்த்தைகளால் குதறுபவர்கள் சிதைக்காமல் இருக்கட்டும் என்றுச்சொல்லவரும் கருத்து அருமை புவன்…
அதிகமாய் உண்டால் அமிர்தமும் விஷமாகும் என்பது போல ஒளி இருட்டைக்களைய மட்டுமே.. ஆனால் அதீத ஒளி கண்களையே குருடாக்கும் அபாயம் உண்டு.. அந்த ஒளி கண் உட்புகுந்து கண்ணுக்கு தீங்கு செய்தப்பின் சிதைக்க எத்தனைப்பேர் முன் வருகிறார்கள்.. புறம்பேச எல்லாரும் முன் வருகிறார்கள்.. அதுவே நல்லதைச்சொல்ல முனைவோர் உண்டா பெண்ணைப்பற்றி? விளக்கேற்ற முனையாத நல்லவர்கள் கண்ணைக்குருடாக்க முன் வருவது போன்று..
நட்ட நடுரோட்டில் ஒரு பெண் விபத்தில் ஆடைகள் நிலைகுலைந்து கிடக்கும்போது எத்தனைப்பேர் பரிதாபமாக ஓடிப்போய் முதல் உதவி செய்து அப்பெண்ணை தன் சகோதரியாக நினைத்து தன் உடைக்கொடுத்து காப்பாற்றி இருப்பார்கள்? விரல் விட்டு எண்ணி விட இயலும்… அதே விபத்தை சூழ்ந்து நின்று கதைகள் பேசி ஆடைகள் விலகிய பகுதிகளை ரகசியமாக பார்க்கும் வக்கிரம் கொண்டோரும் அந்த கூட்டத்தில் இருப்போருண்டு…
ஒருப்பெண்ணைப்பற்றி யாராவது குறைகள் சொன்னாலோ அல்லது அவதூறாக பேசினாலோ உடனே அவருக்கு துணைச்சென்று கேவலமாக பேச முனையாதீர்கள். ஏனெனில் இவர் பார்வையில் கெட்டவளாகத்தெரியும் பெண் நியாயத்தில் நல்லவராக இருக்கலாம் தானே? இவருடைய பொறாமை உணர்வால் கெட்ட சிந்தனைகளால் அந்தப்பெண்ணை அவதூறாக பேசி இருந்திருக்கலாம் தானே? கட்டுக்கதைகள் ஏராளம் ஆதிக்காலத்தில் இருந்து இப்ப வரை பெண்ணைப்பற்றி… அப்படிச்செய்யாமல் உண்மை எதுவென்று ஆராய்ந்துப்பின் முடிவெடுக்கவேண்டும்..
ReplyDeleteஇயந்திர உலகில் அதற்கெல்லாம் நமக்கு சமயம் இருக்கிறதா என்ன? ஆணோ பெண்ணோ குற்றம் சாட்டப்பட்டுவிட்டால் உடனே அவர்களைப்பற்றிய கட்டுக்கதைகளை நம்மால் இயன்ற அளவு பரப்பிக்கொண்டே இருக்கிறோம்.. உண்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சொன்ன கட்டுக்கதைகள் மட்டுமே நிறைந்து அதுவே நிரந்தரமாகிவிடுகிறது..
அட்டகாசமான கரு… அற்புதமான கவிதைப்புனைவு புவன்.. ஹாட்ஸ் ஆஃப்..
கவிதையின் தலைப்பே அசத்தல் புவன் காட்சி மாற்றம்..