Thursday, March 21, 2019

ஊர்ப்பயணம்



 ஒருவழியாக தியாவையும் ஜிஞ்சரையும் தானும் பயணப்படும் நாள்வரை தானே பார்த்துக்கொள்ள கணேசன் ஒப்புக்கொண்டார். அந்த பத்து நாட்களுக்கு மட்டும் 200 திராம் வாடகையில்  பக்கத்தில் ஒரு பெட் ஷாப்பில் கொடுத்துவைக்கமுடிவு.

விமானத்தில் பார்த்த படம் த புக் தீஃப் .. கதைக் காலம் ஜெர்மனில் இரண்டாம் போர்கட்டம்.   லீஸேல் எனும் இளம்பெண் தான் தத்தெடுக்கபட்டதும் கிட்டும் புதுப்பெற்றோருக்கும் புத்தம்புது சூழ்நிலைக்கும் தன்னை நிலைபடுத்திக்கொள்கிறாள். கைக்குள் விரித்த புத்தகங்களில் - விரியும் சிறகுகள் தன் கண்ணுக்கு புலப்படும் வானத்திற்கு அப்பாலும் உலகம் விரிந்திருப்பதையும் , வாசிப்பு தரும் அனுபவத்தில், புதுப்புது வார்த்தைகளை படித்து அது தரும் எண்ண ஓட்டங்களில் சிந்தனாவயப்பட்டவளாகிறாள். வாசிப்பு தரும் உந்துதலில் புத்தகங்களை களவு செய்யவும் துணிகிறாள்.

இறவாத சிரஞ்சீவி மனிதன் எவருமில்லை எனும் போது போர்க்குணமும் சக மனிதனோடு பாரட்டும் அழிவு சிந்தனையும் எதன் பொருட்டு.. 

மனித ஓட்டத்தில் அழகியலும் அதுவற்றதும் ஒருங்கே புலப்படுதலின் அர்த்தமென்ன என்பதாக லீசேலின் எண்ணவோட்டத்தில் கூடவே கதைநகர்த்தலில் அடைகலம் தருதல், அன்பை பகிர்தல், நட்பு பாராட்டுதல் போன்ற மனித மனதின் அழகியலையும், போர் அழிவு மரணம் சேதம் தூரோகம் விரோதம் போன்ற மனித மன வக்கிரத்தையும் ஒருங்கே காட்சிபடுத்தியமை நேர்த்தி. படம்பிடித்திருந்தது. பயண நேரம் இதமாய் கழிந்தது.

 தரையிறக்கத்திற்குப்பின்னும் எல்லாம் சரியாகவேயிருந்தது. விமான நிலையத்தில் இருந்து பிரீப்பேய்ட் டாக்ஸி பிடித்து மடிப்பாக்கம் அடைந்து ராம் நகருக்குள் நுழையும் வரை. 

போன வருடம் கழிவிநீர் குழாய் பதிக்கவென்றால் இம்முறை சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ரோட்டை அகழ்ந்து வைத்திருக்கிறது. அதெப்படித்தான் மழை மாதங்களின் தொடக்கத்தில் பொறுப்பாய் வேலையை தொடங்க நினைக்கிறார்களோ. நல்ல வேலையாக மழை இல்லை. இல்லையெனில் குழந்தைகளோடும் கைச்சுமையோடும் திண்டாடியிருக்கவேண்டியாதாயிருக்கும். டாக்ஸி ஓட்டுனர் கொஞ்சம் புலம்பினாலும் சமாளித்து  மாற்று வழியில் வீடுவந்து சேர்ந்தாச்சு. 

மற்றவை நலம். 

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...