Thursday, March 21, 2019

JULY2015 - CINEMA

பெருநாளை ஒட்டி ஈ லைப்பில் பத்து படங்கள் இலவசம் இலவசம் இலவசம் . பத்தில் எட்டு மொக்கை என்பதே விஷேசம். உருப்படியாய் பார்க்க முடிந்தது. Water diviner. 2014 இல் வெளிவந்த படம்.
ஹீரோ தானே இயக்கி நடித்த படமாம். காட்சியாக்கங்கள் நல்லாவே இருக்கு. பொட்டல் வெளியையும் போர்காட்சிகளையும் காட்டும் போது கூட.
தொலைந்த தன் மூன்று மகன்களைத் தேடி ஆஸ்திரேலியாவில் இருந்து துருக்கிக்கு பயணப்படும் தந்தை சந்திக்கும் இடர்களும் இன்னபிறவுமே கதை. துருக்கியில் தங்கநேரும் விடுதியை நடத்தும் பெண்ணும் அவள் பிள்ளையும் அழகு. நடிப்பும் ஜோர். பேசும் கண்கள் அந்த பெண்ணுக்கு..
கதைக்காலம் 1915- இருந்து Battle of Gallipoli இல் தொடங்குகிறது. போரில் உயிர்நீத்த இருமகன்களைத் தவிர மூத்தவனைக் கண்டு மீட்பதோடு கதை முடிகிறது. எல்லாஞ்சரி ஆஸ்திரேலியாவில் இருந்து துருக்கிக்கு மகன்கள் காணாமல் போனது எப்படி என்பதை சொல்லவே காணோம்.
அடுத்தது ஒரு ஹிந்தி படம். 2013 இல் வந்த இப்பொழுது தான் கண்ணில் பட்ட முழுக்க முழுக்க மாகாளீஸ் படம். Gulaab Gang.
புரட்சிக்காரப் பெண்கள் கேங் தலைவியாக மாதுரி. புரட்சித்தனம் செய்கிற ஒவ்வொரு காட்சியும் பட்டாசு. கூடவே ஆடிப்பாடி பொழுதுபோக்கும் உண்டு. பாடல்களும் இசையும் பொருத்தம். இந்த புரட்சிகேங்கின் வீரத்தை தன்  விவேகத்தோடு கூட்டி அரசியல் லாபம் காண நினைக்கும் சாணக்கிய தன அரசியல்வாதியாக ஜீகி. முகபாவனையில் கூட வில்லிதனம் காட்டாத சூப்பர் வில்லி. சிரித்தமுகத்தோடு கவிழ்க்கிற கதாபாத்திரம் நன்கு பொருந்தியிருக்கிறது. போட்டிப்போட்டு அவரவர் பாத்திரங்களில் தேர்ந்த நடிப்பு. மாதுரியும் ஜீகியும். இருவருமே பிடித்த நடிகைகள்.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...