Thursday, March 21, 2019

JUNE2015 - பொதிசோறு

போன வாரத்திலொரு சமைக்க சோம்பியிருந்த மதியத்தில் வெளியே ஆர்டர் செய்யலாமென மெனுகார்ட்களை துழாவியதில் கீழே ரிஸப்ஷன் நோட்டீஸ் கவுண்டரில் இருந்து எடுத்து வந்திருந்த கொக்கோரிவா எனும்
பெயரும் தொலைபேசி எண்ணும் தவிர மற்றது விளங்கா மொழி முழுக்க மலையாளத்தில் எழுதிய உணவகத்து  விளம்பரம் சிக்கியது.
வாட்ஸப்பில் நண்பிக்கு அனுப்பிய போது பத்து திர்ஹாமுக்கு அசைவப் பொதிசோறு மோசமில்லை முயற்சிக்கலாம் என்றாள்.
 சிலவருடங்களுக்கு முன் தி நகரில் மலபார் கோல்ட் திறந்த புதுதில் குடை ஜிமிக்கி  வாங்கப் போனபோது சாப்பாட்டு நேரமே தொட்டுவிட ( ஒரு செட் ஜிமிக்கி தான் மக்கா) அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு மேல்தளத்தில் தயாராகும் உணவை வாங்க சாப்பிடலாமென அழைத்து உபசரித்தார்கள்.
பக்கா மள்ளு உணவை உண்டது அதுவே முதல் முறை. பிடிக்கவே செய்தது. என்பதால் இந்த கொக்கோரிவாவுக்கு போன் செய்து ஒரு பொதிசோறு பார்சல் சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் வந்தது. முதலாவதாக பேக் செய்திருந்த விதம் மெச்சத்தகுந்ததாக இருந்தது கூடவே
 பத்து திர்ஷாமுக்கு பொதுவாய் யாரும் ஹோம்டெல்வரி செய்யமாட்டார்கள். சூடாய் சுவையாய் தேங்காய் வாசனையோடு உணவும் நலம். முக்கியமாக பீட்ரூட் இஞ்சிபுளி சுவை ஈர்த்தது.
 மீண்டும் வாட்ஸப்பில் நண்பியிடம்
 இந்த உணவகத்தின் வியாபார யுக்தியெல்லாம் வியந்து பார்சல் கவரில் கண்ட வலைத்தளத்தில் ஆராய்ந்த போது
இந்த லிங்க் கிட்டியது. 
https://youtu.be/COxTNyGvd6o

அட உண்மையிலேயே அவ்வளவு வியப்பு மற்றும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. முப்பது பெண்கள் கூட்டாக சேர்ந்து ஒரு உணவகம் நடத்துவது.
இத்தனை பெண்கள்
  சேர்ந்து கூட்டுமுயற்சியில் ஒத்த அலைவரிசையில் இயைந்து
 இசைவாய் இயங்குவதெனில் அதுவும் தொழில்த்துறையில் சுலமான விஷயம் இல்லை.
 யாருமே வசிக்காத இடத்தில் கொண்டுவிட்டாலும் மலையாள மக்கள் தங்களுக்கெனவொரு பிழைக்கும் வழியை தேடிக்கொள்ளக் கூடியவர்கள் தான் என்றாலும் இஸ்லாமியப் பெண்கள் இந்த முப்பது பேர் கூட்டனியும் என்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்கி தங்களுக்கான கோடுகளை நிர்மாணித்துக்கொள்ளும் சுதந்திரம் இன்றளவும் மிகக்குறைவே இவர்களுக்கென அறிவோம்.
உணவகத்தின் உள்கட்டமைப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்பது தவிர சில புகார்களும் உண்டு.
ஆர்டர் கொடுத்து உணவு டேபிளுக்கு வர காத்திருக்கும் நேரம் குறைந்தது முக்கால் மணி நேரம்.
பெயர் வெவ்வேறாய் இருந்தாலும் சுவை ஒரே விதமாக. உதாரணத்திற்கு செட்டிநாடு  ஸ்பெஷல் சிக்கன் கறியும் , குருமாவும் ஒரே ருசியில்.
சமைத்த உணவை பரிமார டேபிளுக்கு கொண்டுவரும் முன் உப்பு காரம் சரியான பதம் பார்பதில்லை. சிலதில் உப்பே இருப்பதில்லை போன்ற பெருங்குறைகளை கண்டு கணக்கில் எடுத்துகொள்வார்களெனில் முப்பது பெண்கள் கூட்டணி நிச்சயம் நல்ல பெயர்காணும்.
வசதிபட வாய்ப்பும் அமையுமெனில்
 நம்மூரில் இப்படியொரு முயற்சி செய்துபார்க்க எண்ணம். பார்ப்போம்.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...