மகளிர் மட்டும் படம் முழுக்க செயற்கை தனமான நாடகம் போல் இருந்தாலும் அதில் மாமியார் மருமகள் உறவை மிகுந்த அணுக்கத்துடன் காட்டியிருப்பது பாரட்டுதலுக்குறியதா இருந்தது. படத்தில் இந்த வசனம்.
மருமகள் - "நான் குழந்தையே பெத்துக்க மாட்டேன்னு சொன்னா கோவிச்சுப்பீங்களா கோம்ஸ்"
மாமியார் - "அதைபத்தி எல்லாம் எனக்கு தெரியாது. உன் பாடு உன் புருசன் பாடு. எனக்கு சம்பந்தம் இல்லாதது" 👌👏👏
வளர்ந்த பிள்ளைகள் அவர்களுக்கான வாழ்கையை அமைவித்துக்கொண்டபின் தன் தலையீடு இராது எனும் மனப்போக்கு மூத்தவர்களுக்கு இருந்திட்டாலே போதும். பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சனையே எழாது.
வழிநடத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட வயது வரை சரிதான். பின்னும் தொட்டதற்கெல்லாம் பெரியவர்கள் மூக்கை நுழைத்துக்கொண்டிருப்பதை சின்னவர்கள் விரும்புவதில்லை என்பதே தெளிவு.
போலவே
வளர்ந்த பிள்ளைகள்
அதுவரை வளர்த்துவிட்ட பெற்றவர்களுக்கு கடமை முடிந்தது..இனி சிவனேன்னு கிடக்க வேண்டியதுதான். அவர்களுக்கென தனிப்பட்ட ஆசாபாசங்கள் ஏதும் இராது எனும் தப்புக்கணக்கும் இருக்கு தானே.
உனக்கென்ன வயதாகிறது இந்த வயதில் இனி இதெல்லாம் உனக்கு தேவையா!!!.. மனப்போக்கு நம்மூரில் ஊறிப்போன ஒன்று.
இந்தபோக்கு மாற்றத்திற்கு குறிப்பிடலுக்குரிய மற்றுமொரு தமிழ் சினிமா பவர் பாண்டி. அவரவர் வாழ்க்கை அவரவருடையது. மனதிற்கும் உணர்வுகளுக்கும் வயதாவதில்லை. வயதாவதென்பது உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தேய்தல் மட்டுமே எனும் புரிதலை சொல்ல இப்படி தெளித்துவிட்டார்ப்போல சில சினிமாக்கள் வருவது ஆரோக்கியமான விஷயமே.
நமக்கு என்ன இருக்கிறதோ இல்லையோ அடுத்தவரை விரல் நீட்டி குறைகூறும்,விமர்ச்சிக்கும் நோயக்கூறு மன சமூகத்தாலும் சார்ந்தவர்களாலும் கொச்சைப்படுத்த படுத்தபடுவதாகிறது
ஒரு ஐம்பது வயதை கடந்துவிட்ட விதவை பெண்மணிக்கு உள்ளெழும் காமம்/காதல் விருப்புகள் - Lipstick Under My Burkha
விண்ணப்ப படிவத்தை நிரப்புவதற்காக பெயர் கேட்கப்படுபோது கூட தன்னிச்சியாக புவாஜி எனவே சொல்கிறார் அந்த பெண். பின்புதான் எவரெவருக்கோ வாழ்ந்து சுய அடையாளமான தன் சொந்தப்பெயரை கூட நெடுவருடங்கள் மறந்துவிட்டதை ஒரு அதிர்வோடு உணர்ந்து திரும்ப திரும்ப தன் பெயரை சொல்லிபார்த்துக்கொள்ளும் காட்சியில் புவாஜி பாத்திரப் பெண்மணி அருமையாக வெளிபடுத்தியிருப்பார்.
இன்னின்ன வயதினருக்கும், இன்னின்ன உடல்/மன தகுதிகள் இருப்பவர்களுக்கும் மட்டுமே பாலுறவு தேவைகள், இச்சைகள் இன்னபிறவற்றுக்கும் அனுமதி என்பதுதானே நம்ம கலாச்சார கட்டமைவின் எழுதாத விதி.
Margarita With A Straw' - இவர்களை கடக்க நேரும் போது ஐய்யோ பாவம் எனும் அனுதாப உச்சுக்கொட்டலுக்கு மேல் அதிகம் நம் சிந்தையை தொட்டிருக்காத,
மாற்றுத்திறனாளின் உடல்/ மன இச்சைகள், கடந்தும் கடக்கமுடியாத தவிப்புகள், தேவைகளை சொல்லியிருக்கும் படம். அதிலும் அந்த கடைசிக்காட்சி.
Be yourself Love yourself. அதுதான் விஷயம். அழகான முத்தாய்ப்பு

No comments:
Post a Comment