Thursday, March 21, 2019

AUG-2015 #vadodara_trip - லக்ஷ்மி பேலஸ்

பள்ளி காலத்தில் பிடிக்காத பாடமே வரலாறு தான். பெயர்களையும் வருடங்களையும் மனனம் செய்து நினைவில் வைத்து எழுதுவது கடுப்படிக்கும். இப்பொழுதானால் அப்படியே நேர்மாறாக ஹிஸ்டாரிக்கல் சப்ஜக்ட் தான் அதிகம் பிடிக்கிறது.
நேற்று முழுக்க சுற்றி வந்தது லக்ஷ்மி பேலஸ், அதையொட்டிய மஹாராஜா ஃபதேக் சிங் மீயூசியம். பார்த்த, கேட்ட ராஜா ராணி கதைகளிலேயே ஜெய்பூர் கதைகள் தான் சுவரஸ்யமானது. இங்கே சுவரஸ்யக் கதைகள் அதிகமில்லை என்றாலும் கலை நுட்ப நுண்ணிய வேலைபாடுகளோடு,  பிரமாதமாக வரலாற்று சிறப்புகளையும் இதிகாசக் கதைகளையும், இங்கே ஆண்ட தலைகளையும் ரவிவர்மாவின்  ஓவியங்களில் காணமுடிகிறது.
லக்ஷ்மி பேலஸ் நுழைவுச்சீட்டு இந்தியர்கள் எனில்
இருநூறு, மீயூசியத்தில் பெரியவர்களுக்கு நூற்றிபத்து சுற்றி பார்க்கும் போது விளக்கம் தெரிந்து கொள்ள காதில் மாட்டிக் கேட்க ஆடியோ கைட் ( இந்தியிலும், ஆங்கிலத்திலும்). நல்ல ஏற்பாடு.
அது ஏன் நுழைவுச்சீட்டு இந்தியர்களுக்கு ஒரு தொகை, அயல் நாட்டவரெனில் மூன்று மடங்கு வித்தியாசமோ அறியேன்.எல்லா இடங்களிலும் இப்படியேதான்.

முதல் படத்தில் ரவிவர்மா ஓவியத்தில் ( காலில் கட்டைவிரலிலும் மெட்டி.. முதல் முறை பார்க்கிறேன்.) மஹாராணி சிம்னாபாய்.
 குஜராத்தை ஆண்ட மராட்டிய மன்னர் சாயோஜி ராவை பதினேழு வயதில் மணந்து இருபது வயதிற்குள் மூன்று குழந்தைகளையும் பெற்று இறந்தும் போனார்.
 மஹாராஜா அடுத்து பதினான்கு வயது லக்ஷ்மி பாயை மணம் செய்து கொண்டார் அவரே
இரண்டாவது படத்தில். மணந்த பிறகு இவர் பெயரையும் சிம்னாபாயென மாற்றிவிட்டார். இந்த அடுத்த மனைவிக்கு வகைதொகயில்லாமல் ஏகபட்ட பிள்ளைகள்.
ராஜாக்களின் காலத்தில் இந்தியாவில் உருப்படியாக நாட்டை ஆண்டார்களோ இல்லையோ குடும்பத்தை பல்கிப்பெருக்குவதில் மன்னர்கள் தான் போலும்.
இந்த மஹாராஜாவின் பிள்ளைகுட்டிகள் வளர்ந்து பெரிதாவதற்குள் பின்னாளில் பால்ய விவாகத் தடைச் சட்டத்தையும் கொண்டுவந்தவரும் இவரே.

மூன்றாவது படத்தில்  பாலகன் கிருஷ்ணனுக்கு திருஷ்டிகழிக்கும் மராட்டிய ஸ்டைலில் ஒன்பது கஜ சேலை உடுத்திய பாரதத்துப் பெண்கள்.
மீயுசியத்தில் கண்ட  ரவிவர்மாவின் அத்தனை ஓவியங்களும் சீதை, ராதை, நளதமயந்தி உட்பட பாரம்பரிய மராட்டிய உடையளங்காரங்களோடே வரையப்பட்டு இருந்தது.
படம் எடுக்க தடை. இந்த படங்கள் கூகுலில் இருந்து எடுத்தது.

#vadodara_trip
PhotoPhotoPhoto
8/21/15
3 Photos - View album
AUG

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...