Thursday, March 21, 2019

queen

எதை ஆழ்ந்து வாசிக்கும் போதும் அதை மனக்கண் கொண்டு காட்சிபடுத்துதல் நாம் எல்லொரும் செய்வோம். கண்முன் விரியும் காட்சிகளில் அமிழ்ந்திருப்பது அத்தனை சுகம். அதே பித்து சினிமா பார்ப்பதிலும். எத்தனை மொக்கை படமா இருந்தாலும் எம்மொழியாய் இருந்தாலும் பார்திருக்கேன். திருமணத்திற்கு பிறகு தியேட்டருக்கு போவது பாதியாகி விட்டதென்றால் அதற்கு முன்பு வரை உதயத்திலும் கமலாவிலும் என்ன படம் வந்தாலும் தோழிகள் நாங்க மூனு பேரும் அங்கிருப்போம். விடுமுறை என்றாலே தியேட்டருக்கோ, தி.நகருக்கோ நேர்ந்து விட்டவர்களாகி விடுவது. ஒவ்வொரு காட்சியையும் கிண்டி கிண்டலித்து துள்ளாட்டத்துடன் கலகலத்து தோழிகளோடு படம் பார்பதே தனி ருசி .. முதல் நாளே திட்டமிட்டபடி தியேட்டர் வாசலில் மூவரும் மீட்டுவதாக 12b பார்க்க முடிவாச்சு..அடாத மழையிலும் விடாது நான் அங்கே போயாச்சு, டிக்கட்டும் எடுத்தாச். தோழிகள் வந்தபாடில்லை.. போன் அடித்தால் இந்த மழைக்கு ஐய்யப்பந்தாங்கலில் இருந்து நீந்திதான் வெளியே வரனும் ... முடியாது என்று விட்டாள் ரஞ்சனி. அடுத்தவளும் அப்படியே .. இதென்னடா இந்த படத்துக்கு வந்த சோதனை. அப்படியாக முதல் முறை இருக்கையின் இடப்புறமும் வலப்புறமும் காலியாயிருக்க தனியே தன்னந்தனியே கலாய்க்க கமெண்ட் அடிக்க துணையில்லாமல் பொம்மை போல் பார்க்க நேர்ந்தது இந்த படம்.

இன்னைக்கு குயின் பார்க்க நினைத்தேன். இங்கே அந்த படத்துக்கு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. நோ ப்ராப்ளம் என்னோடு குட்டீஸ் வீட்டிலிருக்கட்டும் நீ போய் வா என்றார் கணேசன். எனக்கு வாய்த்த நண்பிகள் ஒருத்தரும் வருகிற மாதிரி தெரியல .. அட திரும்பவும் தனியே பொம்மை போல படத்தை பார்பதான்னு ப்ளான் கட்.தனியே ஹனிமூன் போய் ஊர்சுத்தி வரும் பெண்ணின் கதையாம்.. தனியே என்றால் எனக்கு கலகலப்பு மிஸ்ஸாகும்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...