Sunday, March 10, 2019

உயிர்பின் மொழி

ஊர்சுற்றி வரும்போது புர்ஜ் கலிபா,ஐபின் பதுதா, எமரைட்ஸ்  மால் பக்கங்களில் அடிக்கடி கண்ணில் இப்படி முதிந்த ஜோடிகள் தென்படுவார்கள்..

தலைப்பட்ட எல்லா கடமைகளும் முடித்தபின் இன்னமும் ருசிகுறையாத தேனிர் காலத்தை சேர்ந்து பருகும் நோக்கோடு எந்தெந்த நாட்டிலிருந்தோ வந்த ஜோடிகள் கைகோர்த்து திரியும் போது லேஸா பொறாமை கூட எட்டும்.

மிகுந்த ஈடுபாட்டோடும், ரசனையோடும் சுற்றி வரும் இவர்களை பார்க்கும் போது தோன்றும் .. ஏன் நம்ம ஊர் மக்கள் இப்படி முதிர்ச்சியை கொண்டாடுவதில்லை, ஐம்பதை தாண்டும் போதே ஏன் இப்படி அதீதமான ஓய்ச்சலோடு அப்பாடா எல்லாம் முடிந்ததென வெறும் கடமைக்காவே வாழ்வது போல்..

ஒட்டுமொத்தமாய் எல்லா கவலைகளையும் உள்ளே இழுத்துப்போட்டுக்கொள்வதும், விரைவில் நோய் தேடிக்கொள்வதும், நம்ம கையில் என்ன இருக்கு என்ற விட்டேத்தியான போக்கும் .. வயசாயிடுச்சில்ல என்ற பதத்தை அதிகம் புலங்குவதும்  நம்ம ஆட்கள் தான்.

விரும்பிய வகையில் பிடித்ததை செய்து, ரசனையோடு யாரேனும் தென்பட்டால் எதிர்மறை விமர்சனத்திற்கும் குறைவில்லை " பாரேன் நிறைய சதங்கை வைத்து கொலுசு, கையில் மருதாணி, இந்த வயதில் மேலாமினுக்கிதனம் தேவையா " , சில பெண்களே அடுத்த பெண்களை பார்த்து, வயதை முன்வைத்து ஊர் பக்கம் விமர்ச்சிப்பதை பார்க்க கடுப்படிக்கும் ... 

வயதில் என்ன இருக்கு
வாழும் வரை கையில் அள்ளிய 
ஈரமணலில் பதம் செய்யலாம் 
புன்னகைக்கும் பதுமைகளை 

புதுமைப்பித்தனில் செல்லம்மாவில் மூன்று விஷயம் பிடித்தது 

* கதை முடியும் இடத்தில் இருந்து தொடங்கிய போதும் ,

முடிவே தெரிந்த பின்னும் சுவரசியத்தின் சொட்டு மாறாமல் கதை நகர்ந்த விதம்.

* நோய் படுக்கையில் கிடக்கும் பழுத்த இல்லாளுடன் அவளின் இறுதி சுவாசிப்பு வரை  முதிர்ந்த காதலோடு கணவர்.

* கடைசி நிமிடம் வரை தாய்மடிக்கும், புதுபுடவைக்குமான ஆசைகளோடு உயிர்த்திருக்கும், தலை நிமிர்த்தி நிலைக்கும் வரை தன் உடல் சுத்தம் முதற்கொண்டு தனக்கானதை தானே செய்துகொள்ள விழையும் செல்லம்மாவின் வீம்பு சுயம்

எழுதி எத்தனை வருடங்கள் ஆன பின்பும் புதுமைப்பித்தன் ஈர்க்கும் எழுத்தில் 

//மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் 
தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் 
சங்கு பிலாக்கணம் தொடுத்தது.// 

இந்த கடைசி வரியில் எஞ்சியிருக்கிறது நிதர்சனத்தின் உயிர்.

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...