இப்பல்லாம் தினம் மாலை சொல்லிவச்சாப்ல சென்னையில் மழை வருதில்ல. மழை மாலைகளில் சாரல் காற்றில் குளிர்ந்தபடி பால்கனியில் தான் நிற்பது..
வெள்ளி மாலையும் சேரைப்போட்டு உட்கார்ந்து ஜிவ்வுன்னு மழையை வேடிக்கை பார்த்துக்கிட்டே ஒரு ஸ்பைஸி கபாப் ரோலும் சுடச்சுட காபியும் ப்ரெண்ட்ஸோட போனில் அரட்டையுமா ஒன்றரை மணி நேரம் செலவிட்டு
உள்ளே வந்து உடுப்பு மாத்தினபின் இரவு சமையலுக்கு நின்றால்.. மெல்ல முதுகில் படர்ந்தது வலி. அதுதான் அடிக்கடி வந்து போகும் விருந்தாளி ஆச்சே. கண்டுக்காமல் வேலை செய்துகிட்டே இருந்தா அடுத்த விருந்தாளியும் வந்தாச்சு. தெறிக்கும் தலைவலி. இதற்கு மேல் தாங்காதுன்னு போய் படுக்கையில் விழுந்தால் மெல்ல கண்கள் பொங்கி உடம்பில் சூடேறி பிறகு ஒவ்வொரு ஜாயிண்டிலும் வலி பீடித்து ஒரு உலுக்கு உலுக்கிடுச்சு.
இது தான் நான் காய்ச்சலில் விழுந்த கதை. இதுக்கு முன்ன கடைசியா எனக்கு எப்போ காய்ச்சல் வந்ததுன்னே நினைவில்லை. வருடக்கணக்கு இருக்கும்.
ஏதேதோ மனக்கலவரங்களை உள்ளிழுத்து இயலாமையின் பிடியில் உடல் தான் மனதை ஆட்டிவைத்துவிடுமே..
நல்ல ஹெல்தி மோட்ல இருக்கும் போது நம்மால முடியாதது எதுமில்லைங்கிற மிதப்பு இருக்கும்ல்ல
அந்த நினைப்பு ஆட்டம் கண்டுடிச்சு இரண்டு நாள் படுக்கையில் விழுந்து...
குட்டீஸ் இரண்டும் தைலம் தடவி தலையை பிடிச்சு விட்டு, சுடுதண்ணி வச்சுக்கொடுத்து, ஆரஞ்சு உரிச்சுக்கொடுத்து, ப்ரெட் டோஸ்ட் செஞ்சு கொடுத்துன்னு மாத்தி மாத்தி கவனிச்சுக்கிட்டதுங்க. 💖.
ப்ப்பா வலி மிகுந்த அவஸ்தையான பொழுதுகளையும் மறக்காமல் வரலாற்றில் பதிஞ்சுவைக்கனுமில்ல. இதுபோன்ற நோயுற்ற அன்றில் இப்படியாகவும்கூட பதிந்து வைத்திருக்கிறேன்...

No comments:
Post a Comment