Thursday, March 21, 2019

30 december 2014

ஒவ்வொரு வருடம் தொடங்கும் போதும் நிறைய திட்டமிடுவதும். வருடக்கடைசியில் யோசித்துபார்த்தால் கால்வாசிக்கிணறு அகழ்ந்து பின் கிணத்தைக் காணோம் கதைதான் பெரும்பாலும். ஆனாலும்
 அடேங்கப்பா இந்த வருடம் முழுமையும் எத்தனை அனுபவங்கள்.
புதுப்புது உறவுகள், நட்பும் அன்புமாய்
தித்திப்பும் ததும்பலுமான பொழுதுகள்.
ஏராளமான ஊர்சுற்றிப்பயணம் அதுவும் அப்பா அம்மா சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து ஊர்பக்கம் போன இந்த இரண்டு வருடங்களாய் தான் நிறைய ஊர் சுத்த வாய்ப்பு கிட்டுவது. இந்த வருட விடுப்புக்கு ஊருக்கு போன அனுபவம் மிகுந்த நிறைவு. அம்மா அப்பா தங்கையோடு ஒரு மாதம் சேர்ந்தே இருக்க முடிந்ததும் அவர்களுக்கு பிடித்ததை எல்லாம் ஒரு மக(ன்)ளாய் இருந்து செய்ய முடிந்ததும் மிகுந்த  சந்தோசம்.

வாசிப்பும் எழுத்தும் கடைசி சிலமாதங்கள் கிட்டதட்ட சுத்தமாகவே இல்லை. புத்தக அலமாரியை தொடுவதே இல்லை. கவிதைகள் எனக்கே எனக்கான நிறைவுக்கு எப்போதும் எழுதுவேன்.
 யாரும் ஷேர் செய்ந்திருந்தால் கூட நின்று   நிதானமாய் தற்சமயத்துக்கு வாசிக்க கூட  தோன்றவில்லை. என்னை நான் வற்புறுத்திக்கொள்வதில்லை.
 நிறைய பத்திகள் எழுதத்தொடங்கி மேலும் தொடராமலே ட்ராப்ட் பாக்ஸில் கிடக்க. ஆனாலும் என்ன ஆர்வத்துடிப்பையும், பிடிப்புமின்மையும் அதனதன் நிலைப்பாட்டில் நம்மோடு இருக்கவிடுவோம் என்கிற நினைப்பு. தானாய் தோன்றும்போது ஆகட்டும்.  எந்த கட்டுறுத்தலும் எழுதியே ஆகவேண்டிய கட்டாயமும் இல்லாமல் மீளத்தீண்டும் நாள் எழுதிக்கலாம்.

வழமைபோல ஓவர் சென்சிட்டிவ், ,செண்டிமெண்ட்டலாய் இனி  இருக்கக்கூடாதுதெனும் எண்ணமும் அதற்கு எதிர்மறையாகவே நடப்புமாய் இருந்த போதிலும் வேண்டவே வேண்டாதவைகள் இவை என சிலதை புறந்தள்ளி  பின் அந்தபக்கம் திரும்பிக்கூட பார்க்காத திடமும் வளர்ந்து கொண்டிருக்கிறது கூடுதல் அரோக்கியமான விஷயம். எனக்கு நானே சபாஷ் சொல்லிகொள்கிறேன்.

 இயல்பில் சோர்வில்லாமல் துடிப்பாகவே நகர இந்த வருடம் செய்ய நினைத்ததில் உருப்படியாய் செய்கிற காரியம் எடைகுறைப்பு. எழுபத்தி ஆறிலிருந்து எழுபது தொட முடிந்திருக்கிறது. அதற்கும் ஒரு சபாஷ்.

இனி வரும் வருடத்திலாவது ட்ரைவிங் படிச்சுக்கனும். mphil படிக்கத் திட்டம்.. வணங்கனும். சிங்கை,பாரிஸ், மொரிஷியஸை சுற்றி வரும் கனவு மெய்படனும். பார்க்கலாம்

நான் க்ளிக்கியதில் ரொம்ப பிடித்த படமிது.
#கைபேசி_க்ளிக்



அசலாய் அந்த்தந்த நிமிடங்களில் அனுபவத்தால் வாழ்ந்து. நினைவில் நகலிருத்திக்கொண்டு நிறைந்த நன்னம்பிக்கைகளோடு புது வருஷத்தை நோக்கி நகர்வோம்.
இனிதே தொடர

 DECEMBER-30th- 2014

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...