Thursday, March 21, 2019

march 2015 - திருமூர்த்தி மலை

திருமூர்த்தி மலை

அடர்ந்த வனப்பும்,
அடிவாரத்தில் இருந்து உச்சியை பார்பதுவும், மேலிருந்து புள்ளிகளாய் தேயும் உருக்களை பார்பதும் அலாதியானது.
பாறையில் முட்டி சலசலத்து கொட்டும் நீரிலிருந்து விலகவே மனமில்லை குட்டீஸுக்கு, எனக்கும் தான். ஹேங்கப்பா ஏகத்துக்கு பெரிய மாருதி குடும்பம் வசிக்கிறது இம்மலை பகுதியில். கொஞ்சம் அசந்தா போதும். இமைக்கும் நேரத்தில் நம் கையிருப்புகளை பறித்துக் கொண்டு மரம் தாவிவிடுகிறது. மலையேற்றத்தக்கு சீட்டு வாங்கும் போதே கையோடு ஒரு குச்சியை கொடுக்கிறார்கள். அடிவாரத்தில் இருக்கும் கோவிலில் தீர்த்த காவடி, உருமி மேளம் பறையாட்டம் செமையா இருந்தது. கிழக்கு வாசல் படத்தில் முதன்முதலில் ரேவதி கட்டுவண்டியில் இருந்து இறங்கி சாமி கும்பிட போக கார்த்திக் முகம் பார்க்க முயலும் காட்சி படமானது இக்கோவில். சின்ன வயதில் வந்தது. துள்ளளோடு மலையேறிய நினைவு.இப்பொழுதும் அதே பரவசம் தொற்றிக்கொண்டது

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...