Wednesday, May 1, 2013

தூரிகா மொழிபெயர்த்தாள் !


தூரிகா மொழிபெயர்த்தாள் !

நிறங்களின் கூட்டுக்கலவை
புலம்பல்கள்

சிரபுஞ்சிக்கும் சஹாராவுக்குமான
விரவுதல் நெகிழ்த்தி

தேவைக்கு திறந்த குழாயில்
வராத நீரும்
வறண்ட ஓசையும்

கைக்குள் கட்டுண்ட நிலவு
உருகி கசிந்து
உறைந்து போவதற்குமுன்

இருந்தும் விளங்கா பொருளோடு

வீதியில் விரித்த கடையில்
அவன் ஓவியமும்....

-புவனா கணேஷன்

1 comment:

  1. நினைவிற்கும் நிகழ்விற்கும்
    உள்ள வேறுபாடுகளை
    வார்த்தைகளை கொண்டு
    வரையப்பட்ட ஓவியம் தான் இது ..

    எட்டுதிக்கிலும் இணையாத
    ஒன்றை கையகம் செய்ய நினைத்து
    உருகி உறைந்த ஒரு
    ஆத்மாவின் குரலாகவே
    எனக்கு ஒலிக்கிறது ...

    எனது பார்வையில்
    வேறு ஏதும் தோணவில்லை ...

    -வாய்மையே வெல்லும்

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...