Wednesday, May 22, 2013

அனாதைக்கூடு




சிறகுச் சீமாட்டிகள் புணர்ந்ததின்
கூட்டுத் தொகைப் பெருக்கம்
கழிந்ததைச் சுட்டும்
அடையாளச் சுவடுகள்

பாதசாரிகள் அள்ளி உண்டதில்
இரைந்த கூட்டாஞ்சோறு கதைகளின்
மிச்சில்

வாமனன் தலைப் பட்டு பெயர்ந்த
வானத்துண்டு

பாட்டனின் நிலத்தில் பிடாரிக்கூத்து
பேரனின் கடவுச்சீட்டுக்கு
அகதி முத்திரை

-புவனா கணேஷன்

1 comment:

  1. அடேங்கப்பா, உயரத்தில் உட்கார்ந்து இவ்ளோ சீரியஸாத்தான் யோசிச்சிருக்கீங்க!

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...