Wednesday, May 8, 2013

உயிர்த்தலின் நிறம்


சலங்கைக்கு சபிக்கப்பட்டவள்
குளியலறையின்
குழாய் நீர் ஓசைக்கு
கால்கொலுசில் கூட்டிய
ஜதி..

தன்னைப் போன்றதொரு
ஜீவியின் முகபாவத்தை
கண்ணாடியில்
வியந்துப் பார்த்தப் பறவையின்
சிலிர்ப்பு..

நிறம் கவ்வும் வண்ணத்துப்பூச்சி
மலர்வசம் கொண்டப் பித்து..

விழிவிசை படகசைவில்
உவகை நீர் சிலும்பல் !

 

- புவனா கணேஷன்

1 comment:

  1. பெண்கள் என்றாலே நளினமும் பெண்மையும் மென்மையும் நிறைந்த அழகும் புன்னகையும் பெற்ற அற்புத வரம் பெற்றவர்கள்… தனக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவா விட்டாலும் கற்றதைத்தொடர அனுமதித்தாலே போதுமானது… கல்யாணத்திற்கு முன்னாடி பாட்டும், நடனமும் கற்று கல்யாணம் ஆனப்பின் சடார்னு எல்லாவற்றையும் விடச்சொன்னால் என்ன செய்வாள்? யாருக்கும் தெரியாமல் குளிக்கும்போது நீரோடு நீராக ஜதி சேர்த்து ஆடி , பனித்தூறலுடன் பாடி யாரும் அறியாது தன் கலைகளை இப்படியாக புதைத்துக்கொண்டு… துளிர் விடும்போதெல்லாம் ஜதி சேர்த்துக்கொண்டு…

    நேர்மையான அன்பைத்தேடி அலையும் எத்தனையோ உள்ளங்கள்… மாய உலகில் எது உண்மை எது பொய் என்று அறியாது காணும் அனைவரையும் நல்லவர் என்று நினைத்து தன் மனதில் இருக்கும் சோகங்களை கொட்டிவிட்டு அன்புக்காக காத்திருந்து நோக்கும்போது… நல்லவரிடம் சேரும் நட்பு சோகத்தைப்போக்கும் முயற்சியில் ஈடுபடும்… நல்லவரைப்போன்று நடிப்போரிடம் சிக்கிவிட்டால் நட்பு அங்கு நசிந்து நட்பைக்காட்டி ஏமாற்றுவோரிடம் தன் அன்பை பறிகொடுக்கும் நிலையறியாது பேதலிக்கும் மனம்… அதை உதாரணமாகச்சொல்லி சென்ற வரிகள் மிக அருமைப்பா புவன்…போகும் வண்டியில் வந்தமரும் குருவியும்… தன் அழகைப்பார்த்துக்கொள்ள கண்ணாடியில் எட்டிப்பார்க்கும்போது வியந்து தன்னைப்போலவே இருக்கும் இது யார் என்று கண் சிமிட்டுவதும்…

    பூவிடம் பட்டாம்பூச்சிக்கொள்ளம் சிநேகமும் அன்பும் மனிதன் கற்கவேண்டிய ஒன்று…. பூவிடமிருந்து சிரித்து சிலாகித்து கதைகள் பேசி சந்தோஷம் பகிர்ந்து இத்தனை நாள் பழகிய நட்பு சட்டென விலகிப்போனால் சோர்ந்துவிடம் நட்பைப்போல பட்டாம்பூச்சி பறந்து போனதும்… அது போன திசை அறியாது… பின்பற்றி போகும் வழி அறியாது.. ஒரே நாளில் மலர்ந்து வாடி மரணத்தைத்தொடுமுன் பறந்துச்சென்ற பட்டாம்பூச்சி திரும்பி வரும் என்ற காத்திருப்போடு பூவும்… சென்ற பட்டாம்பூச்சி திரும்பி வந்துவிட்டால் அங்கு திரும்ப சந்தோஷமும் பரபரப்பும் சிரிப்பும் மட்டுமே..

    தொலைந்ததெல்லாம் திரும்ப கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும்? தொலைத்த அன்பு… தொலைத்த நட்பு… தொலைத்த நேசம்… நினைத்து பார்க்கவே சந்தோஷம்…மனம் துடித்து கண்ணீராய் கரைபுரண்டு ஓடும்…. நட்புகள் பிரிந்தப்பின் சேர்ந்தால் ஏற்படும் அத்தனை உணர்வுகளையும் அழகாய் வடித்திருக்கிறாய் புவன்..
    கடைசி இரண்டு வரிகள் கவிதையை முழுமையாய் அழகுப்படுத்தி பார்க்கும் அற்புதமான வைரத்துணுக்காய்…. தலைப்பே அட்டகாசம்.. தமிழை அழகாக்கும் விதம் உன்னிடம் பார்க்கிறேன்.. உயிர்த்தலின் நிறம்…. கடைசி இரண்டு வரிகள் அழகு அழகு…
    வாழ்க்கையில் நாம் எத்தனையோ நிகழ்வுகளை காண்கிறோம்.. கேட்கிறோம்… அதை பகிர்கிறோம்.. நுணுக்கமாக அவை யாரும் அறியாது ரகசிய குறியீட்டுகளாக கவிதை வரிகளில் செதுக்கிய தேர்ந்த சிற்பியை காண்கிறேன் புவன் உன் கவிதையில்…

    உன் மனம் மென்மை தான் புவன்… அதில் இருக்கும் வலியான சோகம் துளித்துளியாக இங்கு கவிதையாக பிரதிபலிப்பதை பார்க்கிறேன்… ஹாட்ஸ் ஆஃப் புவன்… பர்ஃபெக்ட்…

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...