வளர்பிறைத் தேயும்
சித்திரத்தாளின்
வடிவுணர்ப் புணர்ச்சி
மசியின் கைச்சூடென
மகிழ்சிறந்து
உயிர்நீவிப் படர்ந்த
பெருந்தீ
கழிமுகக் கூடலின்
நீர்பசை குடுவை
தீண்டாதெனினும்
பூங்குழை மிதப்பசைவு
ஒளிமுடங்கியதொரு
யாமத்தின் அடர்வில்
புதுப்பெயல் துவலையாய்
பச்சை நரம்பூடி
பனி நித்திலப்
பிரியத்தைப் பருகக்கொடுத்தே
தாகமூட்டும் காதல்
*கழிமுகம் - ஆறு, கடலோடு கலத்தல்
புதுப்பெயல் - முதல் மழை
துவலை - குளிர்ந்த நீர்
-புவனம்
No comments:
Post a Comment