இச்சைக்கு இரைதேடும் ஓநாய்கள்
நாவினை அறுத்துக்கொள்ளட்டும்
குருதி ருசிக்கும்
இனபெருக்க இயந்திரங்கள் என்று தீண்டும்
விரல்களுக்கு விளங்கட்டும்
நககண்ணில் ஊசி துளைத்திடச்செய்யும்
எம் இயக்கு விசை என
வக்கிரங்களுக்கு வர்ணம் பூச
பட்டுப்பூசிகளை களவாடும்
தோல் போர்த்திய நர மாமிச பிண்டங்கள்
மரித்து மண்ணோடு மக்கிடுனும் ஆங்கே
விஷச்செடி முளைவிடாதிருக்கட்டும்
- புவனா கணேஷன்
நாவினை அறுத்துக்கொள்ளட்டும்
குருதி ருசிக்கும்
இனபெருக்க இயந்திரங்கள் என்று தீண்டும்
விரல்களுக்கு விளங்கட்டும்
நககண்ணில் ஊசி துளைத்திடச்செய்யும்
எம் இயக்கு விசை என
வக்கிரங்களுக்கு வர்ணம் பூச
பட்டுப்பூசிகளை களவாடும்
தோல் போர்த்திய நர மாமிச பிண்டங்கள்
மரித்து மண்ணோடு மக்கிடுனும் ஆங்கே
விஷச்செடி முளைவிடாதிருக்கட்டும்
- புவனா கணேஷன்
ஹாட்ஸ் ஆஃப் புவன்… தொடக்க வரியே அட்டகாசம்.. இச்சைக்கு இரைதேடும் ஓநாய்கள் மனிதம் அங்கே மறந்து மறைத்து மக்கிப்போய் மிருகங்களாகி மனித உடலை புசிக்கத்தேடும் மனித மிருகங்களை வேட்டையாடி இருக்கிறது உன் ஒவ்வொரு வரியும்…
ReplyDeleteசுழலும் சாட்டையில் என்ன தான் தோய்த்தாய்??? இப்படி ரணகளப்படுத்துகிறதே வரிகள் அட்டகாசம் புவன்…
குழந்தைகளைக்கூட விட்டுவைக்காத சதைப்பிண்டம் இருந்தால் தான் என்ன இறந்தால் தான் என்ன?
நாக்கை அறுத்துக்கொண்டாலும் தன் ரத்தத்தை ருசிக்கும் வக்கிர குணம் கொண்டோருக்கு சரியான மரண அடி உன் கவிதை வரிகள் கொடுத்திருப்பது….
பட்டுடுத்த பட்டுப்பூச்சிகளை கொல்லும் இனத்தில் பிறந்திருக்கும் மனித மிருகங்களின் இந்த அராஜகச்செயலால் பெண்கள் இனி பழையக்காலம் போல் வீட்டில் முடங்கிட வேண்டுமோ என்ற அச்சம் தலைத்தூக்குகிறது….
பார்க்கும் குழந்தைகளில் புன்னகையையும் அன்பையும் ஒன்றாய் தேடும் மனித தெய்வங்கள் மனித குழந்தைகள் வாழும் இந்தப்புவியில் இப்படியும் சில மனித வக்கிர மிருகங்கள் வாழ்வது வீண்… நச் என்று உரைக்கிறது வரிகள்….
நரமாமிச பிண்டங்கள் மரித்துப்போயினும் மண்ணில் புதைத்தால் மக்கி உரமாகாது… பிறருக்கு பயன்படாது விஷச்செடிகளாய் முளைத்து ஊறு விளைவிக்குமோ அபாயச்சங்கு அலறிக்கொண்டே இருக்கிறது உன் கடைசிப்பத்தி கவிதை வரிகள்…
சபாஷ் கைத்தட்டல்கள் புவன் இந்த கவிதைக்கு….
-Manju Bashini Sampathkumar
குழந்தைநிலா ஹேமா ::
ReplyDelete-------------------------
மனித இனத்திலேயோ ,நன்றியுள்ள அன்பான மிருக இனத்திலேயோ சேர்த்துக்கொள்ளக்கூடாதா ராட்சதப் பிசாசுகள்.ஆண் இனத்துக்கே அசிங்கம் சேர்க்கும் அசிங்கங்கள்.அந்த நேரமே அறுத்தெறியும் துணிவு பெண்களுக்கு வரவேண்டும்.அட்டகாசமான கவிதை புவன்ஸ் !
செய்தாலி அ.கா
ReplyDelete----------------
என்னைக்கேட்டால்
தண்டனை கடுமையாக்கப்படவேண்டும்
ஈவு இறக்கமற்ற தண்டை
ஆரேபிய தேசங்களில் நடப்பதைபோல்
கற்பை அகபரித்தவனின்
தலையை கொய்வதுபோல்
தலையை வெட்டவேண்டாம்
மர்மத்தையாவது வெட்டி ஊருக்கு முன் வைக்கவேண்டும்
அதுவே சிறந்த தண்டனை சகோ
ரேவா பக்கங்கள்
ReplyDelete----------------
புவனாக்காவைத்தாண்டி இப்போது மஞ்சுபாஷினி அவர்களின் மீது அதிக அன்பேற்படுகிறது..எத்தனை மெனக்கெடல் கவிதைக்காய் செய்தாலும் இப்படிப்பட்ட மறுமொழிகள் தானே படைப்பாளிக்கு பலம்..அவ்வகையில் வரம் வாய்த்தவள் புவனாக்கா, சரி கவிதைக்கு வருவோம்.. கவிதை பெண் வலிகளை சொல்லி நிற்க, சிறுகுழந்தையையும் விட்டுவைக்கா இவர்களை மிருகமென்றோ காமூகர்களென்றோ வகைப்படுத்தமுடியவில்லை என்னால், இப்போது தான் சகோதரி ஒருவரின் பதிவைப்படித்தேன், நிர்மலா கொற்றவை என்று நினைக்கிறேன்... சிறுபிள்ளைகளைகூட வன்புணர்வு செய்கிற இந்த உணர்வு மன நோயின் அடையாளம் தானே அதோடு அந்த மன நோய்க்கான காரணங்கள் களையப்படவேண்டும்.. என்று சொல்லி நிற்கிறது அப்பதிவு..என்னதான் நாம் பெண்ணியம் பற்றியோ பெண்களின் வலிகளை பற்றியோ எழுதி எழுதி கொட்டினாலும், ஏமாந்த கூட்டமென நம்மை பார்க்கும் இப்பார்வைகள் மாற்றப்படவேண்டும்.. வேறென்ன சொல்ல பாரதி வந்து போகிறான் கண்ணில்...
Kayesye Madhu
ReplyDelete---------------
அருமையான சாட்டை வரிகளை தந்து இருககின்றிர்கள்.அருமை அருமை. பாராட்டுக்கள்;சகோதரி. ஆனால் நாட்டில் நடப்பது என்ன? அன்று டெல்லி சம்பவம் . நேற்று சென்னை, இன்று இந்த சிறுமி. இப்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறதே தவிர எதுவும் குறைந்த பாடு இல்லையே? இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?அரசு என்ன செய்ய வேண்டும்?. அதற்காக நம்மால் ஏதாவது செய்ய முடியும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று சொல்லுங்கள். ஆக்க பூர்வமான காரியங்களை கையில் எடுத்து களம் இறங்குவோம். பெண்ணியம் பேசுவதற்கு பெண்கள் என்றால் பெண்ணியம் காக்க ஆண்களும் தோள் தருவோம்.ஏனெனில் பாதிக்கப்படுவது பெண்கள் அல்ல.எமது சகோதரிகள், எமது உறவுகள் , எமது குழந்தைகள், இன்னும் சொல்லப்போனால் ........ நாங்களும்தான்! இந்த விசயத்தில் ஆண் பெண் வர்க்க பேதம் பாராமல் ஒன்றிணைவோம்! வாருங்கள் சகோதரி
Thiru Thambi
ReplyDelete-------------
மனிதமும் இல்லா மிருகமும் இல்லாததொரு விஷக்கிருமிகள் புன்னகை பூக்கும் முகத்தோடு இருக்கும் இவர்கள் இந்த தேசம் முழுதும் விரவி விட்டார்கள் புற்றுநோயைப்போல..
வௌியே தெரிவது சில
தெரியாமல் போனது லட்சக்கணக்கில்,கோடிக்கணக்கில்....
பெற்ற மகளை
உடன்பிறந்தாளை
கற்க வந்த மாணவியை
மனநிலை பாதிக்கப்பட்டவளை
பூந்தளிரை...
அருவெறுப்பும்,ஆங்காரமும்
ஏதும் செய்யவியலாமல் விரக்தியே மிஞ்சுகிறது