வெயில் உதிர் காலம்
வெப்ப வெதுமை நுகத்தடி
மின்விசிறியோடு மட்டுமே
காதல் கொண்டாடும் காற்று
புற வெளியின் தீட்சை பெற திறந்த சாளரம்
காப்பு தாளிட்ட கதவுக்கு அப்பால்
கடந்தே பழகிய படுகளி
நிசியின் நீள் நீட்சியில் வானம் குதிர்த்த
புள்ளிகளையெல்லாம் கோலமிட்டு
இணைக்கவென வளைந்த
மாயவிரல்கள்
முகம் நகுவதும், அகம் மிளிர்வதும்
உணர்வூட்டு செறிவு எழுதியதென் சிந்தையும்
மனமுவந்து எதிர்கொள்ளும் விந்தையும்
யாதும் ஆகியதென் பிரதிபிம்பம்
வெப்ப வெதுமை நுகத்தடி
மின்விசிறியோடு மட்டுமே
காதல் கொண்டாடும் காற்று
புற வெளியின் தீட்சை பெற திறந்த சாளரம்
காப்பு தாளிட்ட கதவுக்கு அப்பால்
கடந்தே பழகிய படுகளி
நிசியின் நீள் நீட்சியில் வானம் குதிர்த்த
புள்ளிகளையெல்லாம் கோலமிட்டு
இணைக்கவென வளைந்த
மாயவிரல்கள்
முகம் நகுவதும், அகம் மிளிர்வதும்
உணர்வூட்டு செறிவு எழுதியதென் சிந்தையும்
மனமுவந்து எதிர்கொள்ளும் விந்தையும்
யாதும் ஆகியதென் பிரதிபிம்பம்
அற்புதமான வார்த்தைகளில் கவிதையில் உன் விரல்கள் அனாயசமாக விளையாடி இருக்கிறது புவன்.. இந்த கவிதையை நான் வியாழன் அன்றே படித்துவிட்டேன். கருத்து எழுதுவது என்னைப்பொறுத்தவரை ஒரு தவம் போல… ஒரு படைப்பினை ஆழ்ந்து வாசித்து அதில் தன்னை அமிழ்த்தி உட்கிரஹித்து கவிதையில் சஞ்சாரித்து கருத்தை எழுதும்போது இப்படி இருக்குமா என்று நினைத்து எழுதுவேன்.. கருத்து எழுதுவதும் ஒரு ஆழ்நிலை தியானம் போலவே…
ReplyDeleteஉன் கவிதை அதை மெய்ப்பிக்கிறது… வெயில் உதிர்க்காலம்.. கோடையில் சரியான டைமிங் வார்த்தை தேர்ந்தெடுத்திருக்கிறாய்… வெயில் உதிர்க்காலம் இயற்கை அதன் கடமையை சரியாகவே செய்கிறது… மனிதனும் அப்படியே… ஆண் பெண்ணில் மட்டும் எத்தனை வித்தியாசம்?
ஒரு ஆணால் தான் நினைத்ததை எப்பாடுப்பட்டாவது சாதிக்கமுடிகிறது, தைரியமாக தன் மனதில் பட்டதைச்சொல்லியும் விட முடிகிறது… ஆனால் பெண்களுக்கு அப்படிப்பட்ட ஒரு தைரியமும் மனத்திண்மையும் குறைவென்றே உணரமுடிகிறது… எதிர்ப்பார்ப்பதே கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான்.. மின்விசிறி சுழன்றால் காற்று வரும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஒவ்வொரு வீட்டிலும் மின்விசிறி சுழல்கிறது.. தென்றல் நம்மை தீண்டவும் செய்கிறது… பெண் அப்படி நினைத்ததை வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் நிலை…. அதனால் தான் நினைப்பதை எல்லாம் கற்பனையில் நிகழ்த்திக்கொள்கிறாள்… தன் சந்தோஷம்.. தன் வெற்றி, தன் சிரிப்பு… எல்லாமே ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனதில் புதைத்துவைத்துக்கொண்டு நடமாடிக்கொண்டு இருக்கிறாள்…
அகம்… மனம் சந்தோஷமாக இருக்கும்போது முகம் அதை காட்டிக்கொடுக்கிறது அழகாய்.. மனம் அன்பில் நிறைகின்றபோது கண்கள் அதை கொட்டுகிறது கருணையாக.. இங்கே இந்தக்கவிதையில் குறிப்பிட்டிருக்கும் பெண்…. தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளை மிக அழகாக தெள்ளத்தெளிவாக உள்ளக்கிடக்கையை அற்புதமாக சொல்லி செல்கிறாள்…. கவிதை வரிகளாக… தன் சந்தோஷத்தை பூரிப்பை மகிழ்வை மிக அழகாய்… எல்லாப்புள்ளிகளிலும் கோலம் போடும் மாயவிரல்களாக பெண்களின் கற்பனை உலகம்.. அங்கே தன் நிராசைகள் எல்லாமே பூர்த்தி செய்துக்கொள்ளமுடிகிறது.. தாய்மையை, நேசத்தை, அன்பை… இப்படி எல்லாமே மனதிற்குள் பூட்டி வைத்துக்கொண்டால் எப்படி?? வெளிப்படையாய் தன் தாய்மையை பகிரும்போது குழந்தைகள் சுபிக்ஷம்… தாயின் மனமும் நிறைவு… கணவன் மேல் இருக்கும் நேசத்தை… உள்ளே மறைத்து வைக்கும்வரை துணைவன் அறிய முடியாதபடி பூட்டிக்கொள்வதால் பயன் ஏதுமில்லை. அன்பை, நேசத்தை தாய்மையை பகிரும்போதே அங்கு சந்தோஷம் பன்மடங்கு அதிகரிக்கிறது… கோபத்தை, சோகத்தை உள்ளடக்கி வைப்பதினால் ஒரு பயனும் இல்லை.. எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தைக்கொண்டு வந்து சிறகடித்து பறந்துவிடும் பட்டாம்பூச்சியின் சந்தோஷ மனநிலைப்பெற்று மனமும் முகமும் பிரதி பிம்பமும் ஒரே போல் செயல்பட்டு வாழ்க்கையை வெற்றிக்கொள்ளும் சூத்திரமாக அழகியதாய் வரைந்த ஆழ்ந்த கருத்துள்ள தமிழின் தேன் சுவையில் கவிதை மனதை அள்ளுகிறது புவன்… மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்…
புவன் உன்னுடைய தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றுமே தருகிறது மிக அழகிய அர்த்தங்கள்… நிறைய கற்க வைக்கிறது.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
-Manju Bashini Sampathkumar