உச்சி முகரும் கூதலின்
காதல் எவ்வி
திருகிய வெண் சங்கு
மேனித் திண்மத்தில்
கையணைப்பு
குவிந்த சிமிழில் நிலம் பார்க்கும்
அந்தியின் விகசிதம்
மெல்லப் பரவியது
ஸ்பரிசத்தில்
மின்மினிகள் ஒளிர்கூட்டும்
தூக்கணாங்குருவிக் கூட்டின்
இலைநரம்புப் பின்னல்
வயணத்துடன் விரவியது
விரல்கள்
விதும்பும் நரம்புத் தீண்டலின்
திகைப்பில் மேலும் அதிர்வு
கூடியதொரு
கூடற் பொழுதில்
அலர்ந்து அவிழ்ந்த
அன்னத்தூவியென
நிரம்பியது
இசை
-புவனம்
No comments:
Post a Comment