Tuesday, January 21, 2014

தொடர்கதையில் முற்றும் புள்ளி


ஆனந்தத்தை அளவிடக்கூடிய 
கூட்டத்தின்
கோப்பைக் குழறலில்                            
ஓடிக்களைத்த மண் குதிரை 

வாயிலிருந்து நெருப்பை 
உமிழும்
வித்தைபழகியவனின்
உணவில் மரத்த ருசியில்
மற்றுமொரு சொல்லாய்

இறுதியிலும் இறுதியானதொரு
சந்திப்பில்
கையசைத்த நட்பின்கண்
நிரம்பியிருக்கிறது
எம் வற்றிய நதியில்
கற்கள்

-புவனம்

4 comments:

  1. வாயிலிருந்து நெருப்பை
    உமிழும்
    வித்தைபழகியவனின்
    உணவில் மரத்த ருசியில்
    மற்றுமொரு சொல்லாய்

    ReplyDelete
  2. தலைப்பும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு : கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் :
    அன்பின் பூ - இரண்டாம் நாள்

    ReplyDelete
  4. வற்றிய நதியில் கற்கள் .,,
    முற்றும் புள்ளியாய் கனத்தது..!

    ReplyDelete

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...