Monday, December 16, 2013

பஞ்சுப் பொதியில் சுடரும் தீ கண்



உன் பொருட்டு எனைத் தழுவியிருந்த 
பொய்யின் நீர்மையென ஆகாயம் 

இருந்தும் இல்லாமல் போவதன் 
அத்தியாயங்களைச் சொட்டியதன் 
குழி நிறம்பல்களில்
திமிங்கிலங்களை விழுங்கும்
கற்பனை மிதப்பின்
கப்பலை மூழ்க விட
காகிதம் போதுமாயிருந்தது

பெயர்ப் பலகையில்
மழைப்பாசிக்கு மருவிய
இறந்ததன் காலம்

அடைகாக்கும் பக்குவத்தில்
அடுத்த நொடியை
மருதாணியில் தீட்டிக்கொள்ள
மற்றுமொரு கை

-புவனம்

No comments:

Post a Comment

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...