ஏதுமற்றதன் நிரம்பல்களே
இருளில் கிளைத்துக்
தனல்வதாக
நிர்வாணத்தின் நோக்குகையில்
கண்ணேரு கொள்ளவியலாத
கறுமையின் கூடலில்
மற்ற நிறங்கள்
அழகுப்படாது அவிழ
இரவின்
அடர்ந்த
தேவைக்கு மெய்ப்போர்த்திக்கொண்டவனின் கைவெதுப்பு
ஆதிரைக்கு மிக நெருக்கத்தில்
அன்னியப்பட்டுக் கிடக்கிறது
மறுநாள் விடியல் தொட்டு
அவள் மாற்றுப்பெயரோடு
அறியப்படுவாள் என்பதே
மீண்டும் உடுத்திக்கொள்ளும்
வெளிச்சத்தில்
கூசும் கண்களின் விகாரம்.
No comments:
Post a Comment