சிறகுச் சீமாட்டிகள் புணர்ந்ததின்
கூட்டுத் தொகைப் பெருக்கம்
கழிந்ததைச் சுட்டும்
அடையாளச் சுவடுகள்
பாதசாரிகள் அள்ளி உண்டதில்
இரைந்த கூட்டாஞ்சோறு கதைகளின்
மிச்சில்
வாமனன் தலைப் பட்டு பெயர்ந்த
வானத்துண்டு
பாட்டனின் நிலத்தில் பிடாரிக்கூத்து
பேரனின் கடவுச்சீட்டுக்கு
அகதி முத்திரை
-புவனா கணேஷன்
அடேங்கப்பா, உயரத்தில் உட்கார்ந்து இவ்ளோ சீரியஸாத்தான் யோசிச்சிருக்கீங்க!
ReplyDelete