Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, March 26, 2019

MAY2017

மேலும் திமிர்ந்து
எவ்வித மேற்பூச்சுக்களுக்கும் கட்டுறாத இருளுக்குள் அழுத்துகிறது அக்கனவு.
இருளில் தான் எப்பொழுதும் நிகழ்கிறது அச்சம் கவ்வுதல்.
பொறி உமிழ கண்கள் சினவுவதை இருள விடலாம் அங்கே

உடைந்த அல்லது உடைத்தலுக்கு உள்ளாவதை
உயிரெச்சங்களென சொல்லாடலாம்.

பச்சைய மிணுக்கமில்லாத   வாடல்களுக்கும்
வலிக்குமோ!  உணர்வு ஏகுமோ  !! என்பதையெல்லாம்  அக்கனவிலிருந்து மீண்டதும் மறந்துவிடலாம்.

Thursday, March 21, 2019

மேலும் திமிர்ந்து
எவ்வித மேற்பூச்சுக்களுக்கும் கட்டுறாத இருளுக்குள் அழுத்துகிறது அக்கனவு.
இருளில் தான் எப்பொழுதும் நிகழ்கிறது அச்சம் கவ்வுதல்.
பொறி உமிழ கண்கள் சினவுவதை இருள விடலாம் அங்கே

உடைந்த அல்லது உடைத்தலுக்கு உள்ளாவதை
உயிரெச்சங்களென சொல்லாடலாம்.

பச்சைய மிணுக்கமில்லாத   வாடல்களுக்கும்
வலிக்குமோ!  உணர்வு ஏகுமோ  !! என்பதையெல்லாம்  அக்கனவிலிருந்து மீண்டதும் மறந்துவிடலாம்.

2015

தானே விளையாடும்
தனக்கே தனக்கானதன் ஆட்டத்தில்
விருப்பத்தோடான   மீறல்களோடு
 மதர்த்து மகிழ்கூட

கட்டாயத்தின் இறுக்கங்களும்
தந்திரங்களின் திருகுகளும்
உள்ளூடிய
கட்டக்கணக்கீடு  கலாச்சாரத்தின்
 நிறம் கறுப்போ வெள்ளையோ பொருட்டில்லை
சுயமியின்  நகர்வில்
விரல்முடுக்கில்
வெட்டுறாத ராணிக்கு

JUNE2015 - நந்திதா எழுதியிருக்கும் முதல் கவிதை.

நந்திதா எழுதியிருக்கும் முதல் கவிதை.

ஸ்கூலில் டீச்சர் கூப்பிட்டு பாராட்டியதைக் கேட்டு
#ஈன்ற_பொழுதினும்_பெரிதுவக்கும்
 ------------
Dear Future me

Dear Future Me,
Answer to my plead.
I have to warn you now,
So sit down and read.
In each sentence and each word,
I'll tell you about the mystery.
So go ahead and grab your sword,
And get yourself in the history.
The midnight when you know it all,
Will be the day when you start.
Run and hide before it falls,
Before its all apart.
There will stand a road which follows by a door,
Remember the key near the stinking tree.
But be careful, because the door you open,
Spirits will be set free.
Your eyes will wander everywhere,
To find the treasure.
The box across the room that lands,
Because of the gravitational pressure.
Run across and open it up,
You'll find what seem to be.
Mr. Midget the bear,
The teddy with a smile across its face.
Take it and exit the closet before its to late,
Because the monster under your bed
Will pierce your poor fate.
Jump in the bed,
Put your blanket on,
And hide your face.
Mr. Midget will keep you safe,
As he knows how to keep them away.
Now that you know where the treasure lies,
Go and find it right away.
I hope I helped you,
Dear future me.

- Nandita Ganeshan
களிமண் குழைத்திழைத்த
கையளவு உலகம்
மிட்டாய் களிப்பு
மிதக்கும் காதல்
மோகக் குறிப்பெய்தும்
கூழாங்கல் இணை
உரசலிசை ஸ்பரிசம்
அடைநிலத்தில் காந்தபுயல்
அதிர்வு இடுங்கால்
மெல்லோசை
அவளெனில்

காலுக்குக் கீழே
இடறி எக்காளமிடும்
தேய் காலமும்
தவறவிட்ட இரயிலுமாய்

தேவைக்கு மேல் சொல்புகாமல்
தினவுக்கு மிஞ்சி தீண்டல் மிகாமல்
மறுத்தளித்த தேடல் நிமித்தம்
உப்பு மறந்த பண்டத்தோடு
ஊறுகாய் பதத்தில்
தொட்டிடுங்கை
நிரல் நிறைப்பவன்
அவனெனில்

அங்கே பிரிகிறது பாதை....

-புவனம்
கிளைமாற்றி கிளைமாற்றி
காத்திருந்த கனவுகளின் இறக்கைகளை
சுலபமாய்ப்பிய்த்தெரியும் அவனில்
குரூரமுமில்லை காதலுமில்லையெனும்
கைமாற்றும் கசாப்புக்கணக்கில்
எதைக்கொண்டு எதையளப்பது

கூடாமொழியில்
வக்கரித்த சொற்களின்
பதவுறையைக் கொலைப்பதை
எவர் செய்வது

இல்லாததற்கெல்லாம்
இருப்பின்சாயலைத் தோய்த்து
நீர்க்காதவண்ணம்
எவ்விதங் காப்பது

இன்னும் இன்னும்
கேள்வித்த பொழுதுகளெல்லாம்
நுரைக்குமிழியின் நிறையில்
தன்னிலை வட்டத்தில்

-புவனம்
தீண்டுகையின்
காற்றில்
உப்பு பூத்த
குறுஞ்செய்திக்கெனவே
கண்பொழிந்திருந்தாள் ..
தீருகையற்ற
முத்தங்களோடு
தொடுதிரையில்
திமிர்ந்து தேயும்
நிலாக்களை வளர்ப்பவள்

கண்ணெட்டிய தூரம் வரை
கடலள்ளி வைத்த
கரிக்கும்
கரைததும்பும்
நீலம்பாரித்த
பிரிவின் கண்துளையும்
அத்தனை அவசரத்திலும்
சந்திப்பின் இருப்பை
அடுத்த பிரிவு வரை
ஒத்திப்போடவே
மழைச்சொல்லாடுகிறாள்

Thursday, February 19, 2015

நீர்குமிழியின் தாழாக் கண்


ஏதுமற்றதன் நிரம்பல்களே
 இருளில் கிளைத்துக்
தனல்வதாக
 நிர்வாணத்தின் நோக்குகையில்
கண்ணேரு கொள்ளவியலாத
கறுமையின் கூடலில்
மற்ற நிறங்கள்
அழகுப்படாது அவிழ
இரவின்
 அடர்ந்த
 தேவைக்கு மெய்ப்போர்த்திக்கொண்டவனின் கைவெதுப்பு
ஆதிரைக்கு மிக நெருக்கத்தில்
அன்னியப்பட்டுக் கிடக்கிறது

மறுநாள் விடியல் தொட்டு
அவள் மாற்றுப்பெயரோடு
அறியப்படுவாள் என்பதே
மீண்டும் உடுத்திக்கொள்ளும்
வெளிச்சத்தில்
 கூசும் கண்களின் விகாரம்.

Sunday, June 1, 2014

சதுப்பு நிலச் சொற்கள்



சற்றே சமிக்ஞை மொழியில் 
இளைப்பாறட்டும்
 நானின் நிழல் முகிழ
 உவந்தணைத்த நிலா நேரம் 

உப்பு நிலமகழ்ந்து  
முட்டையிடும் 
அந்நேரத்தின் 
ஆமை வேகத்தை பேசுபொருளாக்கலாம்

கறுப்புக்கட்டங்களை விழுங்கும்
 வெள்ளைக் காய்களின்
விளையாட்டு மீறல் விதிக்கு 
பழகுவதாயிருக்கலாம்

பொதியாய் எங்கோ
 அடிமாடுகள் கடத்துமொரு
நகர்வை நெருங்கிபார்த்துமிருக்கலாம் 
அல்லாமல் 
சுள்ளிப் பொறுக்குகளை 
சுருளப் 
பொரிபறக்க ருசிக்கும் 
தீ நாவெனக் 
கலவித்தவரிகளின் வாசிப்பிலிருக்கலாம்

எது எப்படியோ
கொதி நீரின் 
குமிழிகள் உடையும் 
கதையின் 
மூடாதபாத்திரத்தை
சுமப்பவர் ஆகலாம் 
அடுத்த இரவின் 
கதுப்பிலும் 

மூடியிலாத சீசாவில் திரவ நிலையில் இதயம்

 


கிளைமாற்றி கிளைமாற்றி
காத்திருந்த கனவுகளின் இறக்கைகளை
சுலபமாய்ப்பிய்த்தெரியும் அவனில்
குரூரமுமில்லை காதலுமில்லையெனும்
கைமாற்றும் கசாப்புக்கணக்கில்
எதைக்கொண்டு எதையளப்பது

இல்லாததற்கெல்லாம்
இருப்பின்சாயலைத் தோய்த்து 
நீர்க்காதவண்ணம்
எவ்விதங் காப்பது

இன்னும் இன்னும்
கேள்வித்த பொழுதுகளெல்லாம்
நுரைக்குமிழியின் நிறையில்
தன்னிலை வட்டத்தில்

நெய்தலின் தையல்


தீண்டுகையின் 
காற்றில் 
உப்பு பூத்த 
குறுஞ்செய்திக்கெனவே 
கண்பொழிந்திருந்தாள் .. 
தீருகையற்ற 
முத்தங்களோடு 
தொடுதிரையில்  
திமிர்ந்து தேயும் 
நிலாக்களை வளர்ப்பவள் 

கண்ணெட்டிய தூரம் வரை 
கடலள்ளி வைத்த 
கரிக்கும் 
கரைததும்பும்
நீலம்பாரித்த 
பிரிவின் கண்துளையும்
அத்தனை அவசரத்திலும்
சந்திப்பின் இருப்பை 
அடுத்த பிரிவு வரை 
ஒத்திப்போடவே
மழைச்சொல்லாடுகிறாள் 

Tuesday, April 1, 2014

சாரல் கவிதைகள்



அனுமதிக்கு காத்திராமல் 
அவிழும் சொல்லின் 
மகரந்த விகசியை எழுத 
பின்னிப் பிரிந்த 
ஞாபகத்தை
மல்லிமொட்டூறும் வாசச்செய்தியை
காற்று முடங்கும் பொழுத்துக்குள்
லாவகமாய்
கிடுகுகள் முடையும்
கற்பனைக்குள்
சந்தமேற்றி
இவளானதன் இசைச்சீர்


****                        ****

பகடையின்
ஏறுமுகங்களை
இறங்குவிகிதத்தில்
எத்தனையாவது
முறையாகவோ எண்ணிக்கொண்டிருந்தவனின்
கைக்கிளை
பிறிதொரு நாளில்
பூக்காடானது


****                             ****

தொட்ட விரல்களிலெல்லாம்
 பட்டாம்பூச்சியை
 ஒட்டிக்கொண்டவளின் 
சிரிப்பணைய
விரிகிறது நிறங்கள்...


-புவனம்  

Friday, March 21, 2014

கதையின் கதை



மரப்பாச்சிகளின் நிழலுக்கும் 
உளி அறைந்து கொண்டிருந்தவனின் 
ஊர் அது 

உடைந்தவர்களின் வார்த்தைகளுக்கு
பசை விற்பவனாகவே
அறிமுகமாகினான் மற்றொருவன்

ஊரானுக்கும் ஒட்டவந்தவனுக்குமிடையே
இளக்கமற்ற
புன்னகையை முறித்துப் போட்டான்
மூன்றாமவன்

அது
வில்லாகி
பாம்பாகி
பின்
கயிறாகத் திரிந்ததே கதை

-புவனம்

Tuesday, March 4, 2014

உடலைத் தாண்டியும் இவளென

பொய்த்த மழைக்கு 
பிறழ்ந்து 
வனந்தோறும் சுற்றித்திரியும் வெயில்
முதுகில் படர்த்திய வெம்மையை நீவும் 
கொம்புகிளைத்த மான் 

நிரம்பிய நீருக்கு
தாகிக்கும் காக்கைகளுக்கே
காத்திருக்கும்
கழுத்துவரை
கற்களிட்ட
குவளை

தனிமை தின்றது போக
எஞ்சியதன்
முத்தம் பகிர
ஆகாயத்துக்கு எவ்வியதாயொரு
ஊருணித்தவளை

வரைவில் ஏற்றிய
இத்தனைக்கும் பிறகு
தீண்டாத நிறங்களின்
தீட்டலில்
இவளும்

-புவனம் 

Monday, March 3, 2014

சின்ன சின்னதாய்

*ஒற்றை நூல் பிடியில் 
காற்றாடிச் சிலும்பலாய் 
திமிர்ந்தலையும் ஞாபகங்கள்
வண்ணம் தீட்டிக்கொள்ளலாம் பிடித்த பச்சையில்

*பாதம் கொப்பளிக்கும் சூட்டோடும்
நிழலோடிய புத்தியோடும் 
கோவில் பிராகாரத்தை சுற்றி வரும்பொழுதோ 
அல்லது
நடைபாதையில் 
நடுவழியில் ஒற்றைச் செருப்பு 
அறுந்தபொழுதோ
தலையில் இருந்து காலுக்கு
இறங்கிய கனத்தை இங்கே
கழற்றி விடவும்


*அட ! லேசா...
லேசா தூறல் இந்நாட்களின் மேல் 
போதுமாயிருக்கிறது அதுவாக தேங்கிவிட

*நம்மை நாமே
தீட்டும் ஓவியம்
இந்நாள்வரை 
பார்த்தேயிராதவர்களின்
உருவிலிக்கு பொருத்திப்பார்க்கும்
முகமூடி

*அள்ளிச் சுருளப் போர்த்திய குளிரில்
மோதிக் குலவும் மற்றுமொரு 
மழைத்த நாள் 
நீளும் தண் மத்தம்

*தூண்டிலின் தினவுக்கு 
திக்கித்த மீன்களுக்கிடையில் 
கூடையின் விளிம்பைத் தாண்ட 
திமிரும் மீனாகிறது 
தினத்தையொட்டி கொண்டாடப்படும் 
காதல்

*நம் அந்த நேரத்து மனநிலையை கண்ணாடியாய் காட்டும் எழுத்தோ, ஓவியாமோ எது ஒன்றோ எளிதில் நம்மை, மனதைத் தொடும் .. 
தளர்ந்த மனநிலையில் வாரி அணைக்கும் இசையோ சொல்லோ எது ஒன்றோ
நுரைக் குமிழியின் மதர்வில் 
மற்றும் 
பசி நேரத்து பால் குரலில் 

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...