Friday, April 5, 2013

உடல், மன -அழகு, ஆரோக்கியம்

1.அதிகாலையில் எழுந்ததும் இரண்டு இலைகள் துளசி, ஒரு பல் பூண்டு, கொஞ்சம் பனங்கற்கண்டு, மூன்று வறண்ட திராட்சை, ஒரு டம்ளர் மிதமான சூட்டில் வெந்நீர் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

2. கிரீன் டீ .. நான் அருந்தும் விதம்... - இலையை கொதிக்க வைக்கும் போது, பெரிய நெல்லிக்காய் பேஸ்ட் ஒரு ஸ்பூன் கலந்து கொதித்து ஆறியதும் தேன் கலந்து அருந்துவது பொலிவு பிளஸ் நலம்... இதில் வடிகட்டிய சக்கையை முகத்துக்கு ஸ்க்ரப் போட்டுக்கொள்ளலாம் வாரத்தில் இருமுறை.

3.வெயில் காலத்தில் வெந்தய பொடி கொஞ்சம் உள்ளுக்கு எடுத்து வெந்நீர் குடிக்கலாம். கூடவே தலைக்கு வெந்தய பொடி பேக் போட்டு வாரம் ஒரு முறை அலசுவதும் குளிர்ச்சியை கொடுக்கும்.

4.. சீரான மூச்சு பயிற்சி பத்து நிமிடம்

5.கவனத்தை நெற்றி பொட்டில் அல்லது முதுகு தண்டுவடத்தில் நிலைநிறுத்தி 10 நிமிடங்கள் மெடிட்டேசன் செய்வது நலம்.
6.காலாற காற்று வெளியில் 10 நிமிடம் நடந்து விட்டு வருவதும் உசிதம்.

7.அவசியம் அற்ற கண்டதை யோசித்து எந்நேரமும் குழம்பிகொண்டு இருக்காமல் இருத்தல்.

8.மனதிற்கு வருத்தம் தர கூடிய எதுவாக இருந்தாலும் சரி ... ஒரு காகிதத்தில் நிறைக்க எழுதி, ஒரு முறை வாசித்து விட்டு கிழித்து கூடையில் போட்டு, அடுத்த வேலையை பார்க்க போவது ஒரு நல்ல பயிற்சி.

9..கடல் அலைகள் மற்றும் பச்சை தாவரங்களை பார்ப்பது மன அழுத்தம் குறைக்க உதவும்.ஒரு வகையில் கண் வழி யோக பயிற்சி இது.

10.ஒரே மாதிரியான வாழ்க்கை முறையில் இருந்து கொஞ்சம் மாறி வேறு இடத்தில கொஞ்சம் இளைபாறிவிட்டு வருவது நலம்.

-புவனா கணேஷன்

நீ நீயாக

இருட்டுக்கு பழகிய கண்களுக்கு
உன் ஒளிபாய்ந்த உலகத்தின்
உள்நுலைந்ததில் தடுமாற்றம்

சிறகுகள் குறுக்கா தட்டான்கள்
தன்னிலைத்தன்மை

இயல்பில் வழுவியது எல்லாம்
பிறழ்வென இமிழல் ஒன்றுமொழிதல்

தங்கமும் தீக்குளிக்கும்
நகைத்து மின்னும் முன்

கானல் நீரோ காட்சி பிழையோ
ரசனையில் உயிர்த்தது

கருவறையில் சூழ்ந்த கருப்பு
கடவுளை மருட்டியதில்லை

எதுவென்று அழைக்கப்பட்ட போதினும்
நீ நீயாக...

-புவனா கணேஷன்

Monday, March 25, 2013

ஊடும், பாவுமாய்

அவன் ஒரு கைதேர்ந்த நெசவு தொழிலாளி. வீட்டு ஆசாரத்தில் குழிதறி ஒன்றும் மேல்தறி ஒன்றுமாய் போட்டு வைத்து கூட்டுறவு சொசைட்டி  மூலமாக கிடைக்கிற வேலைக்கு, நெசவு கூலிக்கு மட்டுமாய் நெய்து கொண்டு இருக்கிறான்.
விழா கால அவசரத்துக்கு மட்டும், கூட இருவரை சேர்த்துக்கொண்டு இரண்டு மட்ட தறிகளும் இயங்கும்.. இல்லாத நேரத்தில் அவனும் அவன் பொஞ்சாதியும் சேர்ந்தே  ஒப்பேத்தி விடுவார்கள்.. அவளுக்கு இப்போது நிறைமாதம் என்பதால் கூட மாட ஒத்தாசைக்கு வேலன் வந்து போவான். கருநீல உடம்பில் பொன்சரிகை வேய்த சேலை முடிகிற கட்டத்தில் இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நிஜ பட்டு போல போல மின்னியது அந்த கோரா பட்டு சேலை..
இது அவனுக்கு தனி பட்ட முறையில் கிடைத்த ஆர்டர்.. பொதுவாக வருடத்தில் இரண்டு, மூன்று ஆர்டர் தான் இப்படி அரிதாக கிடைக்கும்.. நூல் கொள்முதல் செலவு போக கொஞ்சம் நல்லபடியே வரும்படி பார்க்க முடியும்.
சங்கத்தின் மூலம் கிடைக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமே.. ஆனால் அப்படி நேரடியாக  ஆர்டர் கிடைப்பது அரிது, வியாபாரிகள், சங்கத்தின் மொத்தமாய் வாங்கி போய் விற்பனை செய்து கொள்வார்கள். விசைத்தறி காலம் என்றாலும் கைத்தறிக்கு மௌசு குறையாமல் இருப்பது அதிசயம் தான்.
கண்கள் கவனத்துடன் கூர்ந்திருக்க, கைகளும், கால்களும் தறியோடு ஓயாமல் அசைந்து கொண்டு இருந்தது. தறி இயக்கியோடு பிணைக்கப்பட்ட நீளமான கட்டையில் அதுவரை முடிந்த சேலை பகுதியை வாகாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. பாவும், ஊடுமாய் நூல்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிகொள்ளாமல் அன்போடு பிணைந்து ..இனி எனக்கு பெயர் சேலையாக்கும் என பெருமை பேசிக்கொண்டதோ.. இனிய லயத்துடன் டக்கட்டி டக்கட்டி டக்ககென்ற  தறியோசை கேட்டுக்கொண்டு இருந்தது அங்கே..
கருப்பட்டி தட்டி போட்ட கடுங்காபியும், கடலை வறுத்து போட்ட காரப்பொரியும் தட்டில் ஏந்தி மெதுவான அசைவுகளில் அடுபங்கரையில் இருந்து வந்தாள் அவள்.
கிழே தரையில் அவன் கைக்கெட்டும் வண்ணம் வைத்து அருகில் கைகளை ஊன்றி சற்றே சிரமத்துடன் ஒருக்கணித்து அமர்ந்தாள், எப்படியும் இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்குள் பிரசவித்து விடுவாள்.. தறி சத்தத்தோடு பிள்ளையின் வீல் வீளும் சேர்ந்தே ஒலிக்கும்.
அந்த இனிய கற்பனையில் வேலை பளுவிலும் அவன் முகம் இளகியது.
" சூடாருக்கு, குடி மாமோய், சோறு தண்ணி காணாட்டியும் இந்த கடுங்காபியும், கடலைப்பொரியும் பக்கத்தால இருக்கோணும் உனக்கு"
இது, ஏன் கெடந்து தனியா இம்புட்டு அவசரத்தில் வேலைய செய்யுதே.. மக்காநாள் வேலன் வந்ததும் பாத்துக்கிடலாம், பொழுதாகிப்போச்சு.. சமையத்துக்கு உறங்க பாரு மாமோய்" அவளுடைய ஒவ்வொரு அழைப்பு மாமோயிலும் அத்தனை அன்பு கலந்து இருக்கும்.
"விரசா முடிச்சுக்கொடுத்தா சடுதியில காசு பார்க்கலாம்மிலே.. அதோட ஒரம்பர வீட்டுக்கு  சீராட வந்த புள்ள ஆசை பட்டு கேட்டுச்சு..  விரசா முடிச்சு கொடுத்தா சந்தோசப்படும்"
சரித்தே, அடுத்தவங்க சந்தோசத்தையே பாரு, ராத்தூக்கதில உடம்பு நோவிலே அனத்துவியே, உனக்கு எங்கே தெரிய போகுது.. பொட்டச்சி நான், தான் கிடந்தது தவிக்கேன்"
நாள்பூராவும் கையும், காலும் அசைத்து வேலை செய்து அசதியில் வலி கண்ட போதும் மரம் போல தூங்கிடுவான் ...எத்தனையோ நாள் அவள் தான் கை விரல்களை, கால்களை அழுத்தி பிடித்து விடுவாள்.. பெத்தவங்க இல்லாத அவனுக்கு யாதுமாய் அவளே இருக்கிறாள்.
தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமந்தும், கணவனை தனித்து விட்டு போக மனமில்லாமல், தாய்வீடு போகவில்லை பிரசவத்துக்கு..
தறிக்குள் பிணைந்து நெய்தல் காணும் ஊடும் பாவுமாய்.. இழைத்த உணர்வோட்டம் இருவருக்குள்ளும்.. ஏட்டை படிக்காத போதும் மனதை படித்த தம்பதி என்றே அக்கம் பக்கத்தில் அதிசயமாய் பார்ப்பார்கள்.
"புலம்பாத புள்ள, நீ பக்கத்தில இருக்க, ஒன்னு என்ன ஒன்பது பொடவைய கூட தறியோட்டி போடுவேன்"
சரித்தே, சூடேறி போச்சுது, மிச்சமிருக்கிற சோத்திலே தண்ணிய ஊத்தி வைக்கேன், விடிஞ்சதும் கரைச்சு குடிக்க" அவள் மீண்டும் கைகளை ஊனி எழுந்து போனாள்..
அடுத்தநாள் மதியத்துக்குள் சேலை, உடுத்துகிற தகுதியை பெற்று உருவாங்கி இருந்தது. உழைப்பில் உண்டானது.. ஒரு குழந்தையை போலவே பாவிப்பான் ஒரு ஒரு உருவாக்கத்துக்கு பிறகும், சுருக்கம் நீக்கி, தோதாய் மடித்து அவளிடம் தந்தான்.. இந்தா புள்ள கொடுத்திடு, இதில மொதல் போட்டது போக சொளையா ஆயிரத்தி அறுநூறு நிக்கும். புள்ளத்தாச்சி உனக்கு எதுவும் வாங்கி தந்தது இல்லை.
ஆசைப்பட்டத கேளு புள்ள, டவுனுக்கு போய் வாங்கியாறேன்"
"இந்தா,இந்த பேச்சே வேணா, கேட்டுக்க..கையில காசு காணும் முன்னாடி செலவுக்கு பந்தி வைக்க பாக்கிற, புள்ள பொறப்பு நேரத்துக்கு கைக்காசு தக்க வைக்கோணும்... பக்கத்தால தானே, தந்து போட்டு வாரேன்"
அவள் எப்போதும் அப்படித்தான்.. அது வேண்டும், இது வேண்டும் என ஆற்பரிக்காத மனசு.பத்து ரூபாய் வீட்டு செலவுக்கு வைத்தாலும் அதில் நான்காவதும் மீதம் செய்து உண்டியலில் சேர்ப்பாள். அவனும் தனக்காக ஏதும் செய்து கொள்ளமாட்டான், அவள் விஷயத்துக்கு மட்டும் கணக்கு பார்ப்பது இல்லை.
சேலையை எடுத்து கொண்டு, அதிர்ந்து நடந்தால் வயிற்று பிள்ளைக்கு வலிக்குமோ என மெல்லிய எட்டுக்களில், தாய்மை பொங்க அவள் நடந்து போவது பார்க்க அழகாய் இருந்தது..                                                                                                    
எம்புட்டு நேரமா போட்டோவ பார்த்து ரோசனை பண்ணுவ லே, பொண்ணு பிடிச்சுதா ??, இந்த புள்ளைக்கு அடுத்து பொறந்தது நாலும் பொட்டபுள்ளைக, இம்புட்டு நாளா தறியை ஓட்டி தனியா தள்ளிட்ட, நாளைக்கு பங்காளி, பகுதாளின்னு ஒறவு கூடும், தோது படும்னா சொல்லு பேசி முடிச்சுபோடலாம்."
செய்யுங்க சித்தப்பு என்றான் அவன்
 கையளவு புகைப்படமாய் அவன் உள்ளங்கைக்குள் சிரித்தாள் அவள். 

-புவனா கணேஷன்

Sunday, March 24, 2013

அடுத்த

நாழிகை நகர்வுகளை
கடிகார முள் காட்டி சுமப்பதில்லை
இயக்குதல் சுயேச்சை
இயங்குதல் அனிச்சை
நிசியில் நனைந்த
மை தொட்டு இட்டு
... கடந்த வழிக்கு அடையாள குறியீடு
வழுக்கி விழுகிற தேடல்களில்
இழுத்து சொருகிய நம்பிக்கை
பாத சுவடுகளுக்கும்
பதியும் பரப்புக்குமான
அடர்வு முத்தமாய்
அடுத்த நிமிடத்தை நோக்கி

-புவனா கணேஷன்

இவள்

 குப்பன் வீட்டில் அடுப்பெரிகிறது
உலையில் கொதிக்கிற சோறு
தின்று செரித்தாலும் தீராத வறுமை
நெகிழியாகிறது இடக்கரம் எதிர்காலம் சுமக்க
நெருப்பாகிறது வலக்கரம் நிஜகாலம் சமைக்க
இரும்படித்தும் துருப்பிடியா குபேரனின் கஜானா

-புவனா கணேஷன்

பூத்த

தூர நீள அளப்புகள் காணா
வான் விரிப்பின் கீழ்
நீயும் நானும்
வனைவு காண் மீள் நொடிக்காய்
பூத்த வண்ணம்
நைச்சிய மலர்களில் வாசனை தடவி..
புகை கக்கி புலம்பெயரும்
எதோ ஒரு நகர்வுக்காய்
காத்திருப்பு..
யாசித்தல் அற்ற எதிர்நோக்குகள்
இலச்சினை ஈவு காணுமோ !!!

-புவனா கணேஷன்

நூலிழையில்

அவன் ஒரு கைதேர்ந்த நெசவு தொழிலாளி. வீட்டு ஆசாரத்தில் குழிதறி ஒன்றும் மேல்தறி ஒன்றுமாய் போட்டு வைத்து கூட்டுறவு சொசைட்டி  மூலமாக கிடைக்கிற வேலைக்கு, நெசவு கூலிக்கு மட்டுமாய் நெய்து கொண்டு இருக்கிறான்.
விழா கால அவசரத்துக்கு மட்டும், கூட இருவரை சேர்த்துக்கொண்டு இரண்டு மட்ட தறிகளும் இயங்கும்.. இல்லாத நேரத்தில் அவனும் அவன் பொஞ்சாதியும் சேர்ந்தே  ஒப்பேத்தி விடுவார்கள்.. அவளுக்கு இப்போது நிறைமாதம் என்பதால் கூட மாட ஒத்தாசைக்கு வேலன் வந்து போவான். கருநீல உடம்பில் பொன்சரிகை வேய்த சேலை முடிகிற கட்டத்தில் இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் நிஜ பட்டு போல போல மின்னியது அந்த கோரா பட்டு சேலை..
இது அவனுக்கு தனி பட்ட முறையில் கிடைத்த ஆர்டர்.. பொதுவாக வருடத்தில் இரண்டு, மூன்று ஆர்டர் தான் இப்படி அரிதாக கிடைக்கும்.. நூல் கொள்முதல் செலவு போக கொஞ்சம் நல்லபடியே வரும்படி பார்க்க முடியும்.
சங்கத்தின் மூலம் கிடைக்கும் கூலியை விட மூன்று மடங்கு அதிகமே.. ஆனால் அப்படி நேரடியாக  ஆர்டர் கிடைப்பது அரிது, வியாபாரிகள், சங்கத்தின் மொத்தமாய் வாங்கி போய் விற்பனை செய்து கொள்வார்கள். விசைத்தறி காலம் என்றாலும் கைத்தறிக்கு மௌசு குறையாமல் இருப்பது அதிசயம் தான்.
கண்கள் கவனத்துடன் கூர்ந்திருக்க, கைகளும், கால்களும் தறியோடு ஓயாமல் அசைந்து கொண்டு இருந்தது. தறி இயக்கியோடு பிணைக்கப்பட்ட நீளமான கட்டையில் அதுவரை முடிந்த சேலை பகுதியை வாகாக சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. பாவும், ஊடுமாய் நூல்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிகொள்ளாமல் அன்போடு பிணைந்து ..இனி எனக்கு பெயர் சேலையாக்கும் என பெருமை பேசிக்கொண்டதோ.. இனிய லயத்துடன் டக்கட்டி டக்கட்டி டக்ககென்ற  தறியோசை கேட்டுக்கொண்டு இருந்தது அங்கே..
கருப்பட்டி தட்டி போட்ட கடுங்காபியும், கடலை வறுத்து போட்ட காரப்பொரியும் தட்டில் ஏந்தி மெதுவான அசைவுகளில் அடுபங்கரையில் இருந்து வந்தாள் அவள்.
கிழே தரையில் அவன் கைக்கெட்டும் வண்ணம் வைத்து அருகில் கைகளை ஊன்றி சற்றே சிரமத்துடன் ஒருக்கணித்து அமர்ந்தாள், எப்படியும் இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்குள் பிரசவித்து விடுவாள்.. தறி சத்தத்தோடு பிள்ளையின் வீல் வீளும் சேர்ந்தே ஒலிக்கும்.
அந்த இனிய கற்பனையில் வேலை பளுவிலும் அவன் முகம் இளகியது.
" சூடாருக்கு, குடி மாமோய், சோறு தண்ணி காணாட்டியும் இந்த கடுங்காபியும், கடலைப்பொரியும் பக்கத்தால இருக்கோணும் உனக்கு."
இது, ஏன் கெடந்து தனியா இம்புட்டு அவசரத்தில் வேலைய செய்யுதே.. மக்காநாள் வேலன் வந்ததும் பாத்துக்கிடலாம், பொழுதாகிப்போச்சு.. சமையத்துக்கு உறங்க பாரு மாமோய்" அவளுடைய ஒவ்வொரு அழைப்பு மாமோயிலும் அத்தனை அன்பு கலந்து இருக்கும்.
"விரசா முடிச்சுக்கொடுத்தா சடுதியில காசு பார்க்கலாம்மிலே.. அதோட ஒரம்பர வீட்டுக்கு  சீராட வந்த புள்ள ஆசை பட்டு கேட்டுச்சு..  விரசா முடிச்சு கொடுத்தா சந்தோசப்படும்"
சரித்தே, அடுத்தவங்க சந்தோசத்தையே பாரு, ராத்தூக்கதில உடம்பு நோவிலே அனத்துவியே, உனக்கு எங்கே தெரிய போகுது.. பொட்டச்சி நான், தான் கிடந்தது தவிக்கேன்"
நாள்பூராவும் கையும், காலும் அசைத்து வேலை செய்து அசதியில் வலி கண்ட போதும் மரம் போல தூங்கிடுவான் ...எத்தனையோ நாள் அவள் தான் கை விரல்களை, கால்களை அழுத்தி பிடித்து விடுவாள்.. பெத்தவங்க இல்லாத அவனுக்கு யாதுமாய் அவளே இருக்கிறாள்.
தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமந்தும், கணவனை தனித்து விட்டு போக மனமில்லாமல், தாய்வீடு போகவில்லை பிரசவத்துக்கு..
தறிக்குள் பிணைந்து நெய்தல் காணும் ஊடும் பாவுமாய்.. இழைத்த உணர்வோடும் இருவருக்குள்ளும்.. ஏட்டை படிக்காத போதும் மனதை படித்த தம்பதி என்றே அக்கம் பக்கத்தில் அதிசயமாய் பார்ப்பார்கள்.
"புலம்பாத புள்ள, நீ பக்கத்தில இருக்க, ஒன்னு என்ன ஒன்பது பொடவைய கூட தறியோட்டி போடுவேன்"
சரித்தே, சூடேறி போச்சுது, மிச்சமிருக்கிற சோத்திலே தண்ணிய ஊத்தி வைக்கேன், விடிஞ்சதும் கரைச்சு குடிக்க" அவள் மீண்டும் கைகளை ஊனி எழுந்து போனாள்..
அடுத்தநாள் மதியத்துக்குள் சேலை, உடுத்துகிற தகுதியை பெற்று உருவாங்கி இருந்தது. உழைப்பில் உண்டானது.. ஒரு குழந்தையை போலவே பாவிப்பான் ஒரு ஒரு உருவாக்கத்துக்கு பிறகும், சுருக்கம் நீக்கி, தோதாய் மடித்து அவளிடம் தந்தான்.. இந்தா புள்ள கொடுத்திடு, இதிலே மொதல் போட்டது போக சொளையா ஆயிரத்தி அறுநூறு நிக்கும். புள்ளத்தாச்சி உனக்கு எதுமே வாங்கி தந்தது இல்லை.
ஆசைப்பட்டத கேளு புள்ள, டவுனுக்கு போய் வாங்கியாறேன்"
"இந்தா,இந்த பேச்சே வேணா, கேட்டுக்க..கையில காசு காணும் முன்னாடி செலவுக்கு பந்தி வைக்க பாக்கிற, புள்ள பிறப்பு நேரத்தில் கைக்காசு தக்க வைக்கோணும்... பக்கத்தால தானே, தந்து போட்டு வாரேன்"
அவள் எப்போதும் அப்படித்தான்.. அது வேண்டும், இது வேண்டும் மாதிரி ஆற்பரிக்காத மனசு.பத்து ரூபாய் வீட்டு செலவுக்கு வைத்தாலும் அதில் நான்கு மிச்சம் பிடித்து உண்டியலில் சேர்ப்பாள். அவனும் தனக்காக ஏதும் செய்து கொள்ளமாட்டான், அவள் விஷயத்துக்கு மட்டும் கணக்கு பார்ப்பது இல்லை.
சேலையை எடுத்து கொண்டு, அதிர்ந்து நடந்தால் வயிற்று பிள்ளைக்கு வலிக்குமோ என மெல்லிய எட்டுக்களில், தாய்மை பொங்க அவள் நடந்து வருவது பார்க்க அழகாய் இருந்தது..
ஏனுங்க, உங்க சேலை பதவிசா, நீங்க கேட்ட மாதிரியே வந்து இருக்குங்க, இந்த நெறத்துக்கு கட்டிகிட்டா அம்சமா இருப்பீங்க, ஒருக்கா கட்டி பாத்திடுங்க " என்று நீட்டினாள்.
நெய்தவரிடம் இருந்து நேரிடையாக, புது வாசனையோடு, மொட மொடப்பாய்.. உடனே உடுத்தி பார்த்துவிடும் ஆவலில் கைகளை நீட்டி வாங்க எத்தனித்த போது
எங்கோ, தொலைவில் ஒரு குயில் விடாமல் கூவி இருவர் கவனத்தையும் திருப்பியது.
, கைபேசியில் அலார சினுங்கல்!! ..
விழிப்பு தட்டிவிட்டது..
 
-புவனா கணேஷன்

Thursday, March 14, 2013

மறைந்தும் மறையாமல் மனதோடு...

மறைந்தும் மறையாமல் மனதோடு...

ஸ்மிதா படேல் :
மோனோலிசா போல் சிரிக்கும் முகபாவம் .. காதல் பேசும் கண்கள்.. மாநிற,
அழகு ததும்பும், எனக்கு மிக பிடித்த நடிகை.என் 7 அல்லது 8 வயதில் மறைந்துபோனார்.. அதே நாளில் என் 5 வயது தம்பியும்.. நாடு முழுதும் மூளை காய்ச்சல் பரவி இருந்த சமயம் அது.

ஸ்மிதா :
கண்களை சுழட்டி, சொருகி ஆயிரம் மொழி பேசும் காந்த
கண்ணழகு பெண்மணி..அரிதார பூச்சுக்கு அப்பாற்ப்பட்டு இயல்பில் மென்மையானவர்.பேறும், புகழும், பணமும் கூடவே நிறைய மன அழுத்தமும் கண்டு மறைந்தவர்.

அனுராதா ரமணன் :
பெண் எழுத்தாளர்...இயல்பில் துணிச்சலும், நிமிர்வும் உள்ள பெண்மணி, எழுத்திலும் அதையே பிரதிபலித்தார் , சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி காணாத போதும் நகைச்சுவை ததும்ப எழுத எத்தனித்தவர்...தான் கண்ட நோய், பிணி குறித்து எழுதிய போதும் அப்படியே, இவரின் கதைகளின் தலைப்பு ஈர்ப்பு உள்ளதாக இருக்கும் ரமணிச்சந்திரனின் தலைப்புகளை போலவே ... விதவா கோலத்துக்கு எதிராக நின்ற பெண்மணி.

கே.பி.சுந்தராம்பாள் :
நிஜத்தில் அவ்வையார் எப்படி இருப்பாரோ !.. அவ்வையாரை நினைத்தால் இவர் முகமே தெரியும் ... பக்தி பாடல்கள் பாடியே இவரது கண்கள் தெய்வீகம் பேசுதோ !! என்ன வளமையான குரல்.. முருகன் சிலைகளை பார்க்கும் பொழுது எல்லாம் இவரது குரலில் சென்று வா மகனே, வென்று வா பாடல் மனதில் ஓடும்.

ஷோபா :
செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ..கண்கள் , சிரிப்பு எல்லாம் அள்ளும்.. மாடர்ன் டிரஸ் காட்சியில் கூட மூக்குத்தி மின்னும்.. தனித்தன்மை அழகி ..உண்மையில் முள்ளும் , மலரும் ஒருங்கே கண்டவர்...ரொம்ப சின்ன வயதில் கே.கே.நகர் குடியிருப்பில் நாங்கள் வசித்த வீட்டுக்கு சற்று அருகே ஒரு இடுகாடு இருக்கும் .. இன்றளவும் ஷோபா சுடுகாடு என்றே சுட்ட படுகிறது .. அங்கே தான் இவர் உறைவிடம்.

-புவனா கணேஷன்

STORY 2017

பெயர் தான் அழகர் பெருமாள் கோவிலே ஒழிய உள்ளிருக்கும் அழகரை கண்டுகொண்டதே இல்லை. முன்னே நிற்கும் ஆஞ்சநேயர் சிலையும்  மஞ்சள் பூக்கள்  உதிர்ந்து...